For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இதுக்கு மேல சொன்னா பால் ஊத்திருவாய்ங்கே..!

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை மற்றும் தமிழகத்தை உலுக்கிய மழை வெள்ளம் தொடர்பாக மக்கள் சமூக வலைதளங்களில் மட்டுமல்லாமல் நமது செய்திகளிலும் கருத்துக்கள் தெரிவித்து கொந்தளித்து குமுறியுள்ளனர்.

இப்படி ஒரு மழையை இதற்கு முன்பும் நமது தமிழகம் கண்டுள்ளது என்றபோதிலும் இந்த முறை இது சற்று அதீத கலவரத்தையும், களேபரத்தையும் ஏற்படுத்தி விட்டது என்பதே உண்மை.

இதுகுறித்து நமது செய்திகள் மூலமாக நமது வாசகர்கள் வெளிப்படுத்திய கருத்துக்களின் தொகுப்பு...

பால் ஊத்திருவாங்கப்பா

பால் ஊத்திருவாங்கப்பா

ஓலா கேப்ஸ் நிறுவனம் சென்னையில் போட் விட்ட செய்திக்கு ராஜேஷ் போட்ட கமெண்ட் இது... Thanks to ola . ........இதற்கு மேல் பாராட்டினால் ஓலாவிற்கு பால ஊத்தி விடுவார்கள். நமது அரசியல் வாதிகள்.

யாரும் உதவி செய்ய மாட்டோம்.. ஆமா!

யாரும் உதவி செய்ய மாட்டோம்.. ஆமா!

விஷால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு செய்த உதவி குறித்த செய்திக்கு தமிழன் என்ற பெயரில் ஒருவரின் கருத்து இது- நாம் தமிழர் (கிருத்துவ, இஸ்லாமிய) கட்சி சார்பாக எனது கண்டனத்தை பதிவு செய்கிறேன். தமிழ் இனத்தை சேர்ந்த ஒருவர் மட்டுமே தமிழனுக்கு உதவி செய்ய வேண்டும். தமிழ் இனத்தை சார்ந்த யாரும் பாதிக்க பட வில்லை என்பதால், நாம் தமிழர் கட்சி சார்பாக எந்த உதவியும் செய்ய மாட்டோம் என்பதை மிக வருத்தத்துடன் தெருவிக்கின்றோம்.

அதிமுக விசுவாசமா இருந்தா சரித்தான்

அதிமுக விசுவாசமா இருந்தா சரித்தான்

தங்கமணி கே. என்பவர் நடிகர் சரத்குமார், மழை வெள்ள சேதத்திற்கு தமிழக அரசை குறை கூறக் கூடாது என்று அளித்த பேட்டி தொடர்பாக தெரிவித்த கருத்தில், "நடிகர் சங்க தேர்தலில்அதிமுக காலை வாரி விட்ட பின்னரும் சரத் அதிமுக அரசுக்கு வக்காலத்து வாங்கி பேசி வருகிறார் .இது நிச்சயம்அவரது ச ம க அதிமுக கூட்டணியில்விசுவாசமான தோழமை கட்சி என்பதை அடிக்கடி நிரூபிக்கும் நிலையை காட்டுகிறது .அதிமுக நன்றியுடன் இருந்தால் சரி" என்று கூறியுள்ளார்.

அழிந்து போவீர்கள்

அழிந்து போவீர்கள்

இது சங்கர் என்பவரின் கருத்து. "பொறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து, கிட்டத்தட்ட 360 ஏரி, குளங்களை ஆக்கிரமித்து பொருக்கி அரசியல்வாதிகளின் ஆதரவில் நிலங்களை ரிஜிஸ்டர் செய்தவர்களுக்கு ஆண்டவனின் தண்டனை...தண்ணீர் தன் இடத்தை ஆக்கிரமிப்பு செய்திருக்கிறது...ஆகவே ஆக்கிரமிப்பு செய்தவர்கள் உடனே அந்த இடங்களை காலி செய்ய வேண்டும்...இயற்க்கைக்கு எதிராக செயல் படாதீர்கள்...அழிந்து போவீர்கள்..இது ஆண்டவன் கட்டளை..."

அய்யாமார்களே

அய்யாமார்களே

இது ருத்ரன் - அய்யாமார்களே ! கொஞ்சம் கேரள பக்கம் போய் வாருங்கள் . அங்கே ஆறு மாதம் மழைதான் . அங்கு எப்படி வடிகால் வசதி இருக்கிறது என்று பார்த்து இங்கு அதன் படி செய்யுங்கள்.

புதுசா ஒரு ரமணன் வந்திருக்கார்டா!

புதுசா ஒரு ரமணன் வந்திருக்கார்டா!

பஞ்சாங்கத்தில் சென்னையை புயல் தாக்கும் என்று கூறப்பட்டிருப்பது குறித்து எமிரேட்ஸைச் சேர்ந்த அப்துல் ரஹ்மான் வெளியிட்ட அச்சம் இது..
புதுசா ஒரு ரமணன் வந்திருகார்டா , மாப்ளே ஓடிரு ..!

ஏரியில் வீடு கட்டினால்

ஏரியில் வீடு கட்டினால்

சதீஷ் பெரியசாமி - ஏரியில் வீடு கட்டினால் வெள்ளக்காடு தான். பரத் - கொள்ளை அடிக்க கடவுள் தந்த வழி. கமல் - எனது தலைமையிலான அரசு தலைக்கு உள்ள எதுவும் இல்லை.

அட யாரு சார் டிவி பார்த்தது

அட யாரு சார் டிவி பார்த்தது

முத்தெழிலன் பீட்டர் தனது நிலையை இப்படிச் சொல்கிறார் - நாலு நாலா வீட்டில் தண்ணீர் புகுந்தது . கரண்டவேற கட் பண்ணீட்டாங்க ! இதுல யாரு சார் டிவி பாத்தது ?

சுனாமியை விட கொடுமையா இருக்கும் போலயே

சுனாமியை விட கொடுமையா இருக்கும் போலயே

மீண்டும் 3 நாட்களுக்கு மழை பெய்யும் என்று எஸ்.ஆர்.ரமணன் கூறியுள்ளது குறித்து அமெரிக்காவிலிருந்து நல்லவன் இப்படிக் கவலைப்பட்டுள்ளார் - போச்சு டா.. சுனாமி ய விட கொடுமையா இருக்கும் போலயே..

அல்ட்டிமேட் பன்ச் பாஸ் இது!

அல்ட்டிமேட் பன்ச் பாஸ் இது!

இது விஜயகாந்த் குறித்த ஒரு மழைச் செய்திக்கு முருகதாஸ் என்பவர் போட்ட கமெண்ட் - சரி! ரொம்ப மழை குளிரா இருக்கு! போயி ஒரு பாட்டில் வாங்கி குடிக்கலாமா?!

English summary
Readers have commented on the rain and rain related news in Oneindia Tamil and some are here.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X