For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

என் மீது வழக்கு தொடுத்துள்ளது அதிமுக; வழக்கை சந்திக்க தயார் - வைகோ

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: தமி்ழக முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான சிறுதாவூர் பங்களாவில் கோடிக்கணக்கான பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறிய மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரும், மதிமுகவின் பொதுச்செயலாளருமான வைகோ மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை சந்திக்க தாம் தயாராக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

சாத்தூர், நெல்லையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டங்களில் பேசிய வைகோ, முதல்வர் ஜெயலலிதா அடிக்கடி தங்குகின்ற சிறுதாவூர் பங்களாவிற்கு மிகப் பெரிய கண்டெய்னர் ஒன்று லாரியில் எடுத்துச் செல்லப்பட்டதாக கூறினார்.

 Ready to face admk's defamation case: vaiko

அதில் நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் ரூ.1000 மற்றும் ரூ. 500 அடங்கிய நோட்டுக் கட்டுகள் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புக்கு அந்தக் கண்டெய்னரில் கொண்டு செல்லப்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டினார்.

இந்நிலையில், உண்மைக்கு புறம்பாக, அவதுாறாக பேசி களங்கம் ஏற்படுத்திய மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரும், மதிமுகவின் பொதுச்செயலாளருமான வைகோ மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, காஞ்சிபுரம் மாவட்ட அ.தி.மு.க. செயலர் சிட்லபாக்கம் ராஜேந்திரன், போலீசில் புகார் கூறினார். புகாரின் அடிப்படையில் திருப்போரூர் போலீசார் வைகோ மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த வைகோ கூறியதாவது; மிக எளிய முறையில் பிரசாரம் செய்வதற்காக, எல்.இ.டி., விளக்கு மற்றும் ஒலிபெருக்கி கூடிய பிரசார வாகனத்தை தயார் செய்துள்ளோம். தேர்தல் கமிஷனிடம் அனுமதி பெற்று, பிரசாரம் மேற்கொள்வோம்.

சிறுதாவூர் பங்களா அருகே, லாரிகளில் பணம் பதுக்கப்பட்டு உள்ளது எனக் கூறிய குற்றச்சாட்டு தொடர்பாக, என் மீது அதிமுகவினர் புகார் செய்துள்ளனர். இப்புகாரை ஏற்றுக் கொண்டு, திருப்போரூர் போலீசார் பிணையில் வெளி வர முடியாத பிரிவில் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதற்கு பயந்து, ஜாமீன் வாங்க மாட்டேன்.. இதுவரை ஜாமீன் வாங்கி எனக்கு பழக்கம் கிடையாது. வழக்கை சந்திக்க தயாராக உள்ளேன் என்றார் வைகோ

English summary
Mdmk General Secretary vaiko said, Ready to face admk's defamation case
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X