For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்து கோயில்களையும் அதன் நிலங்களையும் மீட்பதே லட்சியம் - இந்து முன்னணி ராமகோபாலன்

இந்து கோயில்களையும், அதன் நிலங்களையும் மீட்பதே லட்சியம் என்று இந்து முன்னணி அமைப்பாளர் ராமகோபாலன் தெரிவித்துள்ளார்

By Dakshinamurthy
Google Oneindia Tamil News

Recommended Video

    இந்து கோயில்களையும் அதன் நிலங்களையும் மீட்பதே லட்சியம்

    திருப்பூர்: இந்து கோயில்களையும், இந்து மக்களுக்கு சொந்தமான நிலங்களையும் மீட்பதே தங்களின் லட்சியம் என இந்து முன்னணி அமைப்பாளர் ராமகோபாலன் தெரவித்துள்ளார்

    திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தில் 'காவியமயமாகும் தமிழகம்' என்ற தலைப்பில் இந்து முன்னணியின் சார்பாக நேற்று நடைபெற்றது. இதில் இந்து முன்னணி நிறுவனர் ராம கோபாலன் பேசியதாவது: சமூக வலைதளங்களை நல்லமுறையில் பயன்படுத்த வேண்டும், தற்போது குழந்தைகள் கூட செல்போனை பயன்படுத்துவது ஆபத்தானது. ஆண்டாள் பற்றி பேசுவதற்கு வைரமுத்துவிற்கு வாய் கூசவில்லையா? என்றார்.

     Recovering Hindu Temples is our aim says Ramagopalan

    மேலும் பேசிய அவர், வைரமுத்து இந்து கடவுள்களை அவமதிப்பது இது முதல் முறையல்ல என்றார். முதல்முறை பேசும் போதே அவரை நாம் கண்டித்து இருந்தால் மறுபடியும் அவர் பேச அச்சப்பட்டிருப்பார் என்று கூறினார்.

    இந்து முன்னணி தொடங்கிய நாள் முதல் இந்து கோவில்களை, இலக்கியத்தை, கடவுள்களை, பண்பாட்டை யாராவது விமர்சித்தால் தமிழ்நாடு கொந்தளித்துள்ளது. இத்தனை ஆண்டுகளாய் நாம் செய்த கடுமையான வேலையால் தமிழகத்தில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் காவியை காலூன்ற விடமாட்டோம் என்று சிலர் அறிக்கை விடுகிறார்கள். எங்களை காலூன்ற விடுவதற்கு அவர்கள் தமிழகத்தை குத்தகைக்கு எடுத்துள்ளார்களா என்றும் ராமகோபாலன் கேள்வி எழுப்பினார்.

    மேலும் பேசிய அவர், இந்து கோவில்களை மீட்க வேண்டும் என்பது தான் இந்து முன்னணியின் லட்சியம் என்றும், நம்மாலும் முடியும் என்ற உறுதியோடு அனைவரும் இந்த லட்சியத்தை நோக்கி செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

    English summary
    Recovering Hindu Temples is our aim says Ramagopalan. During speaking in a State Conference arranged by hindu munnani he urged all hindu to protest against the people who mistreats Hinduism
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X