For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

செம்மரக்கடத்தலில் வழக்கில் போக்கு காட்டிவந்த 'ஏர்ஹோஸ்டஸ்' சங்கீதா சாட்டர்ஜீ கைது

செம்மரக் கடத்தல் விவகாரத்தில் சிக்கி தலைமறைவாக இருந்த விமான பணிப் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: செம்மரக் கடத்தல் விவகாரத்தில் சிக்கி தலைமறைவாக இருந்த விமான பணிப் பெண் சங்கீதா சாட்டர்ஜி கைது செய்யப்பட்டுள்ளார். பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு சுமார் 9 மாதங்களுக்குப் பிறகு அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

செம்மரக்கடத்தலில் சர்வதேச அளவில் தொடர்புடைய லட்சுமணனை சித்தூர் போலீசார் 2014 ஆண்டு கைது செய்தனர். அவர் குண்டர் சட்டத்தில் கடப்பா சிறையில் அடைக்கப்பட்டார்.

Red wood smuggling case Sangeetha satterjee arrested

2015 ஆகஸ்ட் மாதம் ஜாமினில் வெளியே வந்த லட்சுமணன் மீண்டும் செம்மரக்கடத்தலில் ஈடுப்பட்டு வந்தார். இதையடுத்து சித்தூர் போலீசார் மீண்டும் கைது செய்து கடப்பா சிறையில் அடைத்தனர்.

லட்சுமணன் சிறையில் இருந்தாலும் அவர் தரப்பில் லட்சுமணன் 2 வது மனைவியும் விமான பணி பெண்னுமான சங்கீதா சட்டர்ஜி செம்மரம் கடத்தி வருவது தெரிய வந்தது. சங்கீதா மீது சித்தூர், யாதமரி, குடிபாலா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்ய நடவடிக்கை எடுத்து வந்தனர்.

2016 ஜனவரியில் சங்கீதாவை சித்தூர் போலீசார் கொல்கத்தாவில் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 1 மணி நேரத்தில் சினிமா பாணியில் சங்கீதாவின் வழக்கறிஞர்கள் 30 கொண்ட குழு நீதிமன்றத்தில் ஆஜராகி ஜாமின் பெற்றனர். அதன் பிறகு 2016 மே 15 மற்றும் 30 ஆம் தேதி சித்தூர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டிய சங்கீதா ஆஜார் ஆகாததால் 2016 ஜுன் 5 தேதி சங்கீதாவிற்கு பிடிவாரண்டு பிரப்பிக்கப்பட்டது.

அப்போதிலிருந்து சங்கீதாவை கைது செய்ய போலீசால் முயற்சி செய்தும் பிடிக்க முடியாமல் இருந்தது. ஜுன் 19 தேதி சங்கீதாவின் வங்கி கணக்கை முடக்கி ரூ 10 லட்சம் பணம், 2.5 கிலோ தங்க ஆபரணம், 1 கிலோ வெள்ளி பொருட்கள் 1 லேப்டாப் 9 செல்போன், 60 லட்சம் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் புதியதாக கொண்டு வரப்பட்ட சட்டத்தின்படி பறிமுதல் செய்தனர். மேலும் லட்சுமணன் கைது செய்யப்பட்ட பிறகு சங்கீதாவின் வங்கி கணக்கில் இருந்து ரூ 90 லட்சம் பணம் பரிமாற்றம் செய்யப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் சங்கீதா சாட்டர்ஜியை போலீசார் கைது செய்துள்ளனர்

English summary
Red wood smuggling case Sangeetha satterjee has been arrested by the police.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X