For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கல்வித்துறைக்கு புத்தொளி கொடுத்த உதயச்சந்திரன்.. ஒன்றா, இரண்டா எடுத்துச் சொல்ல!

எந்த முன்னேற்றமும் இல்லாத பள்ளிக் கல்வித் துறை அதன் செயலாளராகஉதயசந்திரன் பொறுப்பேற்ற பின்னர் புத்துயிர் பெற்றது என்று கூறும் அளவுக்கு எத்தனை எத்தனை சீர்திருத்தங்கள்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: கடந்த 6 ஆண்டுகளாக எந்தவித முன்னேற்றமும் இல்லாத பள்ளிக் கல்வியில் வந்த 5 மாதங்களில் எண்ணற்ற திட்டங்களை தீட்டியுள்ள உதயசந்திரனின் பணிகள் பாராட்டுதலுக்குரியது.

தமிழக பள்ளிக் கல்வித் துறை செயலாளராக உதயசந்திரன் கடந்த மார்ச் மாதம் தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதனால் நியமிக்கப்பட்டார். அவர் பதவியேற்ற மாதம் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான மாதமாகும்.

அந்த தேர்வு முடிவுகளில் மிகப்பெரிய புரட்சியையே அவர் செய்தார் என்று கூறினால் அது மிகையாகாது. ஆண்டுதோறும் பிளஸ் 2, 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில்
மாநில வாரியாக முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் மாணவர்களின் பெயர்கள் வெளியிடப்படும். ஆனால் இந்த ஆண்டு அதுபோன்ற கிரேடு முறை ஒழிக்கப்பட்டது.

சீர்திருத்தங்கள் என்ன

சீர்திருத்தங்கள் என்ன

வழக்கத்துக்கு மாறாக பள்ளிகளிலோ, கல்வி நிறுவனங்களிலோ எந்தவித ஆரவாரம், ஆர்ப்பாட்டம் இன்றி தேர்வு முடிவுகள் வெளியாகின. அதேபோல் பிளஸ் 2 தேர்வு மதிப்பெண்ணை 600-ஆக மாற்றியது, பிளஸ் 1 வகுப்பை பொதுத் தேர்வாக அறிமுகப்படுத்தியது, இரு வகுப்புகளுக்கும் சேர்த்து பிளஸ் 2 முடிவில் சான்றிதழ் வழங்குவது என எண்ணற்ற சீர்திருத்தங்கள் செய்த உதயசந்திரனை இடமாற்றம் செய்ய தமிழக அரசு முயற்சித்து வருவதாக தகவல்கள் வெளியாகின. இதற்கு கல்வியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

திட்டங்கள் என்னென்ன

திட்டங்கள் என்னென்ன

1) 30 புதிய தொடக்கப்பள்ளிகள் தொடங்கப்படும்
2) புதுமைகளை புகுத்தி சிறப்பாகச் செயல்படும் அரசு பள்ளிகளை கண்டறிந்து மாவட்டத்திற்கு 4 பள்ளிகள் வீதம் தேர்ந்தெடுக்கப்பட்டு "புதுமைப் பள்ளி" விருது ரூ.1.92 கோடி செலவில் வழங்கப்படும்
3) அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு எளிமைப்படுத்தப்பட்ட செயல்வழிக் கற்றல் அட்டைகள் ரூ.31.82 கோடி செலவில் வழங்கப்படும்.
4) 486 அரசு நடுநிலைப் பள்ளிகளில் ரூ 6.71 கோடி செலவில் கணினி வழிக் கற்றல் மையங்கள் அமைக்கப்படும்.
5) 5639 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளுக்கு நாப்கின் வழங்கும் இயந்திரம் மற்றும் எரியூட்டி இயந்திரம் ரூ. 22.56 கோடி செலவில் வழங்கப்படும்.
6) 31322 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு ரூ. 4.83 கோடி செலவில் நாளிதழ்கள் மற்றும் சிறுவர் இதழ்கள் வழங்கப்படும்.

ஆசிரியர் நலம்

ஆசிரியர் நலம்

7) 4084 ஆசிரியர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்.
8) கனவு ஆசிரியர் விருது. மாவட்டத்திற்கு 6 சிறந்த ஆசிரியர்களுக்கு ரூ10000 பரிசுத் தொகை, பாராட்டுச் சான்றிதழ்.
9) தொடர் நீட்டிப்பு கோரப்படும் 17000 தற்காலிக பணியிடங்கள் நிரந்தர பணியிடங்களாக மாற்றம்.
10) சுயநிதிப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கும் பணியிடை பயிற்சி

மாணவர் நலம்

மாணவர் நலம்

11) அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளுக்கு ரூ.39.25 கோடி செலவில் கற்றல் துணைக்கருவிகள் வழங்கப்படும்.
12) திறனறித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு ரூ. 2.93 கோடி செலவில் சிறப்புப் பயிற்சி அளிக்கப்படும்
13) அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தனித்திறமையோடு விளங்கும் 100 மாணவர்களுக்கு ஆண்டு தோறும் ரூ.3 கோடி செலவில் மேலை நாடுகளுக்கு கல்வி பயணம் மேற்கொள்ள வாய்ப்பு அளிக்கப்படும்
14) கலை, இலக்கியம் நுண்கலை உள்ளிட்ட 150 வகைப் பிரிவுகளில் பள்ளி, ஒன்றியம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் ஒரு மாபெரும் மாணவர் கலைத்திருவிழா ரூ. 4 கோடி செலவில் நடத்தப்படும்.
15) பன்னிரண்டாம் வகுப்பு பயின்ற மாணவர்கள் அவர்களது மேற்படிப்பைத் தொடர்வதற்கு உதவிடும் வகையில் கல்விக்கடன் முகாம்கள் நடத்தப்படும்.

போட்டித் தேர்வுக்கு...

போட்டித் தேர்வுக்கு...

16) ஒன்றிய அளவில் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையங்கள் ரூ.20 கோடி செலவில் அமைக்கப்படும்
17) மேற்படிப்பு / வேலைவாய்ப்புக்கான போட்டித் தேர்வுகளுக்கு வழிகாட்டி மையங்கள் அனைத்து உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளிலும் ஏற்படுத்தப்படும். மேலும் கருத்தரங்குகள் ரூ. 2 கோடி செலவில் நடத்தப்படும்.

மின் ஆளுமை

மின் ஆளுமை

18) காணொளி பாடங்கள், கணினி வழித் தேர்வுகள், அலைபேசிச் செயலிகள் உள்ளடக்கிய கற்றல் மேலாண்மைத் தளம் ரூ.2 கோடி செலவில் ஏற்படுத்தப்படும்.
19) அரசுத்தேர்வுகள் இயக்கக செயல்பாடுகள் ரூ.2 கோடி செலவில் கணினி மயமாக்கப்படும்
20)மெட்ரிகுலேசன் பள்ளிகள் தொடங்க அனுமதி/ அங்கீகாரம்/ தொடர் அங்கீகாரம் வழங்க இணையவழியில் நடவடிக்கை எடுக்கப்படும்.
21) ரூ.25 கோடி செலவில் பொது நூலகங்களுக்கு புதிய நூல்களும் அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு ரூ.5 கோடி செலவில் புதிய நூல்கள் வாங்கப்படும்
22) அனைத்து மாவட்டத் தலைநகரங்களில் ரூ.3.கோடி செலவில் புத்தகக் கண்காட்சி நடத்தப்படும்.

நூலகங்கள்

நூலகங்கள்

23)தமிழ்ச் சங்கம் கண்ட மதுரையில் ரூ.6 கோடி செலவில் மாபெரும் நூலகம் அமைக்கப்படும்
24) தனித்தன்மை வாய்ந்த எட்டு சிறப்பு நூலகங்கள் மற்றும் காட்சிக் கூடங்கள் ரூ.8 கோடி செலவில் அமைக்கப்படும்
• சிந்து சமவெளி நாகரிகம் உள்ளிட்ட பழம்பெரும் நாகரிகங்கள் - கீழடி, சிவகங்கை மாவட்டம்
• தமிழிசை, நடனம் மற்றும் நுண்கலைகள் - தஞ்சாவூர்
• நாட்டுப்புறக் கலைகள் - மதுரை
• தமிழ் மருத்துவம் - திருநெல்வேலி
• பழங்குடியினர் பண்பாடு - நீலகிரி
• கணிதம், அறிவியல் - திருச்சி
• வானியல், புதுமைக் கண்டுபிடிப்புகள் - கோயம்புத்தூர்
• அச்சுக்கலை - சென்னை
25) மாவட்ட மைய நூலகங்களில் போட்டித் தேர்வு பயிற்சி மையங்கள் ரூ.72 இலட்சம் செலவில் அமைக்கப்படும்
26) 123 முழுநேர கிளை நூலகங்களில் மின்னிதழ் வசதிகளுடன் கூடிய கணினி வசதி ரூ. 1.84 கோடி செலவில் ஏற்படுத்தப்படும்.

அரிய நூல்கள்

அரிய நூல்கள்

27) ரூ. 2. கோடி செலவில் நவீன மின் நூலகம் அமைக்கப்படும்
28) அரிய வகை நூல்கள் மற்றும் ஆவணங்களை பொதுமக்களிடமிருந்து கொடையாக பெறும் திட்டம் தொடங்கப்படும்
29) அரிய வகை நூல்களைப் பாதுகாத்து வரும் தனியார் அமைப்புகள் நடத்தி வரும் நூலகங்களுக்கு பராமரிப்பு நிதி வழங்கப்படும்
30) நவீன அறிவியல், தொழில்நுட்ப நூல்களைத் தமிழில் ரூ.5 கோடி செலவில் மொழி பெயர்க்கப்படும்.
31) அரசுப் பள்ளி மாணவர்கள் பயனடையும் வகையில் நடமாடும் புத்தகக் கண்காட்சி நடத்தப்படும்

நிர்வாகம்

நிர்வாகம்


32) மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் புதிய பணியிடங்கள் ரூ. 60 இலட்சம் செலவினத்தில் ஏற்படுத்தப்படும்
33) கிருஷ்ணகிரி மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் புதிய மெட்ரிகுலேசன் பள்ளிகள் ஆய்வாளர் அலுவலகம் அமைக்கப்படும்
34)பள்ளிக் கல்வித் துறையின் அலுவலர்களுக்கு ரூ.2.89 கோடி செலவில் புதிய வாகனங்கள் வழங்கப்படும்
முறைசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி
35) 3 மற்றும் 5ம் வகுப்பிற்கு இணையான சமநிலைக் கல்வித் திட்டம் ரூ.13.94 கோடி செலவில் செயல்படுத்தப்படும்.

English summary
TN Government is in proposal to transfer TN Education Secretary Udhayachandran IAS though he did reforms in the past 5 months. Educationalists are opposing government's decision.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X