For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மைக்ரோசாப்டுக்கும் தினகரன் 'குக்கருக்கும்' என்ன தொடர்பு தெரியுமா?

பல முக்கிய நிறுவனங்கள் தங்களது புது லோகோவை மக்கள் மத்தியில் கொண்டு போக கஷ்டப்பட்டுக் கொண்டு இருக்கும் போது தினகரன் தனது குக்கர் சின்னத்தை ஆர்.கே நகரில் எளிதாக பிரபலபடுத்தி இருக்கிறார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

சென்னை: ஆர்.கே நகரில் தினகரன் தனக்கு தேர்தல் சின்னம் கிடைத்த பத்தே நாளில் அதை மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்து இருக்கிறார். பல முக்கிய நிறுவனங்கள் செய்ய முடியாத சாதனையை இவர் இதன் மூலம் செய்து இருக்கிறார்.

ஆம் உலகில் பல பெரிய நிறுவனங்கள் தங்களது லோகோவை மாற்றிவிட்டு பெரிய பிரச்சனையில் சிக்கி இருக்கிறது. மேலும் சில நிறுவனங்கள் மீண்டும் பழைய லோகோவிற்கு மாறிவிடலாம் என்று கூட முடிவு எடுத்து இருக்கிறது.

ஆனால் ஒரு புதிய சின்னத்தை மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்ததன் மூலம் அசாத்திய சாதனை படைத்து இருக்கிறார் டிடிவி தினகரன்.

லோகோவில் அரசியல்

லோகோவில் அரசியல்

மைக்ரோசாப்ட், கூகுள், பெப்சி போன்ற நிறுவனங்களின் லோகோக்கள் தற்போது மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான லோகோவாக இருக்கிறது. இதை உருவாக்குவதற்கு முன்பு பல முக்கிய விஷயங்களை கருத்தில் கொள்வார்கள். என்ன நிறம் இருக்க வேண்டும், என்ன வடிவம் இருக்க வேண்டும், எப்படி லோகோ நிறுவனத்துடன் நெருக்கமாக இருக்க வேண்டும் என்று நிறைய விஷயம் கருத்தில் கொள்ளப்படும்.

லோகோ மாற்றப்பட்டது

லோகோ மாற்றப்பட்டது

லோகோவை மாற்றுவதுதான் இருப்பதிலேயே மிகவும் ரிஸ்க்கான செயல். விண்டோஸ் நிறுவனமும், கூகுளும் கொஞ்சம் அடி வாங்க தொடங்கிய போது உடனே தங்களது லோகோவை மாற்றினார்கள். அது பெரிய அளவில் அவர்களுக்கு கைகொடுத்தது. ஆனால் லோகோவை மாற்றிய பெப்சி நிறுவனம் அதற்கு பின்புதான் அதிக பிரச்சனைகளை சந்தித்தது.

குக்கர்

குக்கர்

எப்போதும் லோகோ மாற்றுவது நல்ல மாற்றத்தை கொடுக்காது. அதேபோல் தான் தினகரனுக்கு குக்கர் சின்னம் மாற்றி வழங்கப்பட்டது. அதுவரை அவரது அடையாளமாக இருந்த தொப்பியும் காற்றில் பறந்தது. அவர் கேட்ட விசிலும், கிரிக்கெட் பேட்டும் கிடைக்கவில்லை. ஆனால் மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது லோகோவை மாற்றிய பின் எப்படி எல்லாம் வேகமாக வேலை செய்ததோ அப்படி எல்லாம் தினகரனும் வேலை செய்தார்.

நல்ல வரவேற்பு

நல்ல வரவேற்பு

மைக்ரோசாப்ட் மற்றும் கூகுள் லோகோ மாற்றிய போது உலகமே அதை பற்றி பேசும் படி வைத்துக் கொண்டார்கள். இதுதான் எங்கள் புது அடையாளம் பாருங்கள் என்று வெளிப்படையாக தெரிவித்தார்கள். தினகரனும் அப்படித்தான் ஆர்.கே நகர் முழுக்க குக்கர் இருக்கும்படி பார்த்துக் கொண்டார். தன்னுடைய காரில் கூட மினி குக்கர் பொம்மையை வைத்து இருந்தார். இந்த லோகோ அரசியல் தான் பல நாள் 'இலை அரசியலை' தூக்கி சாப்பிட்டு இருக்கிறது.

English summary
There are lot of relations exist between TTV Dinakaran's cookers symbol and famous logos in the world. Most of the companies in the world have suffered after changing their logo, but in the mean time TTV Dinakaran made a huge breakthrough from his new election symbol cooker.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X