For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னையில் உள்ள என் பெற்றோரை பார்த்தீங்களா, நண்பனை பார்த்தீங்களா?: ட்விட்டரில் மக்கள் கதறல்

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் தங்களின் உறவினர்களை தொடர்பு கொள்ள முடியாதவர்கள் ட்விட்டரில் அவர்களின் விபரங்களை வெளியிட்டு யாராவது உதவுங்களேன் என்று கேட்டு வருகிறார்கள்.

வரலாறு காணாத மழையால் சென்னை வெள்ளக்காடாகியுள்ளது. இந்நிலையில் இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ஏற்கனவே வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்கள் மேலும் பெய்யும் மழையை தாங்கக் கூடிய நிலையில் இல்லை.

வெள்ளத்தால் சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

மின்சாரம்

மின்சாரம்

செல்போனை சார்ஜ் போட மின்சாரம் இல்லாததால் மக்களின் செல்போன்கள் சுவிட்ச் ஆப் ஆகியுள்ளது. இந்நிலையில் அவர்களின் நிலைமையை பற்றி தெரியாமல் வெளியூரில் வசிக்கும் சொந்தங்கள் கவலையில் உள்ளனர்.

ட்விட்டர்

ட்விட்டர்

சென்னையில் சிக்கியுள்ள தங்களின் உறவினர்களை எந்த வழியிலும் தொடர்பு கொள்ள முடியாததால் வெளியூர், வெளிநாட்டில் வசிக்கும் மக்கள் ட்விட்டரில் அவர்களின் விபரங்களை வெளியிட்டு அருகில் உள்ள யாராவது உதவி செய்யுங்களேன் என்று கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

அசோக் நகர்

#chennaifloods #ChennaiRainsHelp #ashoknagar பிளாட் 8, 52, ராகவா காலனி, முதல் லிங்க் தெரு, அசோக்நகர் முதல் தளம் பெற்றோரிடம் இருந்து இதுவரை எந்த தகவலும் இல்லை என்று கார்த்திக் அமிர்தராஜன் ட்வீட் செய்துள்ளார்.

பெற்றோர்

@editorsuresh என் நண்பரின் பெற்றோர் 6வது தெரு, குமரன் காலனி, வடபழனியில் உள்ளனர். நேற்று காலையில் இருந்து அவர்களை செல்போனில் தொடர்பு கொள்ள முடியவில்லை. ஏதாவது தெரியுமா? என்று ஷங்கர் என்பவர் கேட்டுள்ளார். நானும் அங்கு தான் உள்ளேன். செல்போன் எண்ணை அளிக்கவும். தேவையானவற்றை செய்கிறேன் என்று சுரேஷ் உறுதி அளித்துள்ளார்.

English summary
People from other districts and other states are using twitter to ask people to find out their relatives who have got stuck in flooded Chennai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X