For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சுதந்திரப் போராளி ஒண்டி வீரன் தபால் தலை - ஆக.20 நினைவு நாளில் வெளியிடப்படும் !

Google Oneindia Tamil News

நெல்லை: : சுதந்திரப் போராட்ட வீரர்களில் ஒருவரான ஒண்டி வீரரின் தியாகத்தை போற்றும் வகையில், அவரது நினைவு தினமான வரும் 20-ம் தேதி, பாளையங்கோட்டையில் தபால் தலை வெளியிடப்படும் என மத்திய அமைச்சர் டாக்டர் எல் முருகன் தெரிவித்துள்ளார்.

சென்னை கீழ்ப்பாக்கத்தில், 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு தமிழ்நாடு பெட்ரோலியம் விற்பனையாளர்கள் சங்கம் சார்பாக நடைபெற்ற சுதந்திர தின விழா நிகழ்ச்சியில், மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் பங்கேற்று தேசியக்கொடி ஏற்றி வைத்தார். பின்னர், பொது மக்களுக்கு தேசியக் கொடிகளை அமைச்சர் முருகன் விநியோகம் செய்தார். மேலும் அங்கு அமைக்கப்பட்டுள்ள கொரோனா பூஸ்டர் தடுப்பூசி அரங்கையும் அவர் திறந்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் சார்பில் 'இந்தியப் பிரிவினையின் தாக்கம்' என்ற தலைப்பில் அமைக்கப்பட்டிருந்த புகைப்படக் கண்காட்சியையும் அமைச்சர் முருகன் திறந்து வைத்துப் பார்வையிட்டார்.

 Release of Freedom fighter Ondiveeran postage stamp on August 20 - L. Murugan

இதையடுத்து நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் எல்.முருகன் பேசியதாவது : பிரதமரின் அழைப்பை ஏற்று நாடு முழுவதும் குறிப்பாக, தமிழகத்தில் ஒவ்வொருவரும் தங்களின் வீடுகள், கடைகள், அலுவலகங்களில் மூவண்ணக்கொடியை ஏற்றி பெருமைபடுத்தி ஆதரவளித்து வருகின்றனர்.

தமிழகத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன், பூலித்தேவன், கொடி காத்தக் குமரன் என எண்ணற்றோர் நாட்டின் விடுதலைக்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்டனர். அவர்களை பெருமைப்படுத்தும் வகையில் வீடுதோறும் மூவண்ணக் கொடியை ஏற்றி மக்கள் ஆதரவளித்து வருகின்றனர்.

மேலும், வ உ சி 150வது பிறந்த தினம், பாரதியார் நூற்றாண்டு விழா போன்றவற்றைக் கொண்டாடி வருகின்றோம். தமிழகத்தில் 1000-க்கும் மேற்பட்ட சுதந்திரப் போராளிகள் இருந்தனர். அதில் 200-க்கும் மேற்பட்டோர் அறியப்படாத வீரர்களாக உள்ளனர்.

அப்படி நாடுமுழுவதும் வெள்ளையர்களை எதிர்த்துப் போரிட்ட விடுதலைப் போராட்ட வீரர்களின் வாழ்க்கை வரலாற்றை மக்கள் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் 'சுராஜ்' என்ற பெயரில் நெடுந்தொடர் தூர்தர்ஷனில் நாளைமுதல் தொடர்ந்து 75 எபிசோட் ஒளிபரப்பாகவுள்ளது‌.
அதோடு, அறியப்படாத வீரர்களில் ஒருவரான ஒண்டி வீரனின் நினைவு தினமான வரும் 20-ம் தேதி, பாளையங்கோட்டையில் அவரது தபால் தலை வெளியிடப்படவுள்ளது. இவ்வாறு மத்திய அமைச்சர் எல் முருகன் தெரிவித்தார்.

சாவர்க்கர் சுதந்திரப் போராட்ட வீரர்.. திப்பு சுல்தான் யார்? காங். கட்சியின் டிகே சிவக்குமார் கேள்வி! சாவர்க்கர் சுதந்திரப் போராட்ட வீரர்.. திப்பு சுல்தான் யார்? காங். கட்சியின் டிகே சிவக்குமார் கேள்வி!

English summary
Union Minister Dr. L Murugan said that the postage stamp of Ondiveeran will be released on the 20th.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X