For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெ.வுக்காக 20 மாணவர்களுக்கு அலகு குத்திய விவகாரம்: தமிழக அரசுக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்!

ஜெயலலிதா உடல்நலம் பெற வேண்டும் என்பதற்காக 20 மாணவர்களுக்கு அலகு குத்தியதாக எழுந்த புகாரில் தமிழக அரசு விளக்கம் அளிக்க மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது அவர் நலம் பெற வேண்டி 20 மாணவர்களின் கன்னங்களில் அலகு குத்தியதாக எழுந்த புகார் குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.

ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்.22-ஆம் தேதி உடல்நலக் குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் உடல் நலம் பெற வேண்டும் என்பதற்காக கடந்த 2016-ஆம் ஆண்டு அக்டோபர் 3-ஆம் தேதி 20 மாணவர்களுக்கு வலுக்கட்டாயமாக அலகு குத்தப்பட்டதாக புகார் எழுந்தது.

Religious ritual for 20 students, HRC asks TN government

இந்த 20 மாணவர்களும் ஆர்.கே.நகரில் இருந்து தண்டையார்பேட்டைக்கு அழைத்து செல்லப்பட்டதாகவும் புகார் எழுந்துள்ளது. இந்த புகாரை பெற்ற மனித உரிமைகள் ஆணையம் அதுகுறித்து தமிழக அரசு 4 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

English summary
When Jayalalitha was admitted in Hospital, 20 students were done religious ritual to insert their chins in small iron rod. Human Rights Commission asks explanation from TN government within 4 weeks.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X