For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மகாளய அமாவாசையில் வாடகை காகத்திற்கு உணவு - வைரல் வீடியோ

முன்னோர்களுக்கு திதி கொடுத்து உணவு படைக்க காகத்தை வாடகைக்கு விடுகிறார் ஒருவர். மகாளய அமாவாசை தினத்தன்று இந்த காகம் உணவு சாப்பிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: மகாளய அமாவாசை தினத்தன்று முன்னோர்களுக்கு உணவு படைக்க வாடகைக் காகத்தை நாடியுள்ளனர் மக்கள். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

காகத்தின் ரூபத்தில் முன்னோர்கள் நம்மிடம் இருக்கிறார்கள், பேசுகிறார்கள் என்ற ஆழமான நம்பிக்கை இன்றளவிலும் மக்கள் மத்தியில் இருக்கிறது.

Rental crow in mahalaya amavasai eats food

பல வீடுகளில் முன்னோர்களுக்கு திதி படைத்த பின்னர் அந்த உணவை காகத்திற்கு முதலில் தானம் செய்யும் பழக்கம் இருக்கிறது.

விரத காலங்களில் காகத்திற்கு அன்னமிட்டு, அடியார் ஒருவருக்கு உணவளித்த பின்னரே மனிதர்கள் தங்கள் விரதத்தை நிறைவு செய்ய வேண்டும் என சில நூல்களில் கூறப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் கடந்த சிலதினங்களுக்கு முன்பு மகாளய அமாவாசை அனுஷ்டிக்கப்பட்டது. அப்போது காகத்திற்கு உணவு படைக்க சிலர் வாடகைக் காகத்தை நாடினர்.

ஒருவர் தனது கையில் காகத்தை பிடித்துக்கொண்டு உணவுகளை கொத்தி சாப்பிட வைத்தார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

நாம் தானம் தரும் உணவை காகம் தானாக பறந்து வந்து கொத்தி சாப்பிட வேண்டும். இதுதான் மரபு ஆனால் இங்கோ, காகத்தை வாடகைக்கு விட்டு சாப்பிடுகிறார்கள்.

English summary
People forced or Rented crow to pay homage to Ancestors.In Mahalaya Amavasya respecting our ancestors giving food to Crow is common nature.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X