For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மவுலிவாக்கம் கட்டிடம் விபத்து: முதல்வரிடம் விசாரணைக் கமிஷன் அறிக்கை தாக்கல்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: சென்னை மவுலிவாக்கம் கட்டிட விபத்து குறித்து ரகுபதி கமிஷன் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. தலைமை செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதாவிடம் நீதிபதி ரகுபதி அறிக்கையை வழங்கினார்.

சென்னை போரூர் அருகே உள்ள மவுலிவாக்கத்தில் கடந்த ஜுன் மாதம் 28-ந்தேதி 11 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. இதில் 60-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். தென்இந்தியாவில் நடந்த பயங்கரமான விபத்து இதுவாகும்.

Report on Chennai building collapse submitted to TN CM

இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்று தி.மு.க. உள்பட பல்வேறு கட்சிகள் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், இச்சம்பவம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ரகுபதி தலைமையில் ஒரு நபர் விசாரணை கமிஷன் அமைத்து முதல்வர் ஜெயலலிதா கடந்த ஜூலை 3-ந்தேதி உத்தரவிட்டார்.

முதல்வரின் உத்தரவுப்படி இக்கட்டிட விபத்து தொடர்பாக விசாரணை நடத்திய நீதிபதி ரகுபதி அது தொடர்பான அறிக்கையை தயார் செய்தார். அந்த அறிக்கையை இன்று முதல்வர் ஜெயலலிதாவிடம் சமர்ப்பித்தார்.

English summary
The one-man inquiry commission appointed by the Tamil Nadu government to probe the building collapse near here which left 61 persons dead, submitted its report to Chief Minister J Jayalalithaa Monday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X