For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குடியரசு தின விழா.. 'அய்யனார்' சிலையில் பூணூல் அணிவித்தது ஏன்? - சிலையை வடிவமை‌த்தவர் விளக்கம்

Google Oneindia Tamil News

சென்னை: டெல்லியில் குடியரசு தின விழாவில தமிழகம் சார்பில் அணிவகுப்பில் கண்காட்சியாக வரஉள்ள அய்யனார் சிலையில் பூணூல் அணிவித்து இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக அந்த சிலையை வடிவமைத்த டில்லிபாபு விளக்கமளித்துள்ளார்.

நாட்டின் 71வது குடியரசுத் தினவிழா இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இன்று டெல்லியில் நடைபெறும் குடியரசுத் தின விழாவின் ஓர் அங்கமாக ராஜ பாதையில் தமிழகம், ஆந்திரா, உத்தரப் பிரதேசம், ஆந்திரா, தெலுங்கானா உள்பட 16 மாநிலங்கள் சார்பில் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு நடக்கிறது.

republic day celebration: Why did wear a poonal on the Ayyanar statue?

இதற்கான ஒத்திகை கடந்த இரண்டு நாட்களாக நடந்தது. அதில் தமிழ்நாடு சார்பிலான அணிவகுப்பில் தமிழர்களின் காவல் தெய்வமாக கருதப்படும் அய்யனார் சிலை காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது.

17 அடி உயரம் கொண்ட பிரமாண்ட சிலை, அவருக்கு முன்னால் குதிரையும், காவலாளிகளும் இருப்பது போல் வடிவமைக்கப்பட்டு இருந்த அய்யனார் சிலையில் பூணூல் அணிவித்து இருந்தது சர்ச்சை எழுந்தது. அய்யனார் எப்போது பூணூல் அணிந்தார் என்று சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தது.

#RepublicDay2020 தேசமெங்கும் உற்சாகம்.. குடியரசு தினத்தை பெருமையுடன் கொண்டாடும் இந்தியர்கள்#RepublicDay2020 தேசமெங்கும் உற்சாகம்.. குடியரசு தினத்தை பெருமையுடன் கொண்டாடும் இந்தியர்கள்

இது குறித்து அந்த சிலையை வடிவமைத்த சிலை வடிவமைப்பாளர் டில்லி பாபு, இரண்டு கை வேலுடன் கூடிய அய்யனார் என்றால் பூணூல் இருக்காது என்றதங. ஆனால் இந்த அய்யனார் சிவனுடைய அம்சம் என்பதால் பூணூல் அணிவித்திருப்பதாக டெல்லி பாபு விளக்கம் அளித்துளார்.

English summary
republic day celebration: Why did wear a poonal on the Ayyanar statue? the statue designer Description
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X