For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குடியரசு தின விழா ஒத்திகை.. மெரீனா பீச் சாலையில்.. போக்குவரத்து மாற்றம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: 67வது குடியரசு தின விழா கொண்டாடப்படுவதையொட்டி, சென்னை காமராஜர் சாலையில் முதல் ஒத்திகை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. முதல்வர் ஜெயலலிதாவின் சாதனைகளை விளக்கும் வாகனங்களில் ஊர்வலமும் நடைபெற்றது. குடியரசு தின விழா ஒத்திகை நிகழ்ச்சி நடப்பதை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில், 22 மற்றும் 24ம் தேதி காலை, 6 மணியில் இருந்து, 10 மணி வரை 4 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இந்த 4 நாட்களிலும் காலை 6 மணி முதல் 10 மணி வரை காமராஜர் சாலையில் வாகனங்களுக்கு அனுமதி கிடையாது. 26ம் தேதி விழா முடியும் வரை போக்குவரத்து மாற்றம் அமலில் இருக்கும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நாட்டின் 67வது குடியரசு தினவிழா வரும் 26ம் தேதி நாடுமுழுவதும் கொண்டாடப்படவுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறவுள்ள குடியரசுதின விழாவிற்கான ஒத்திகை நிகழ்ச்சி காமராஜர் சாலையில் இன்று நடைபெற்றது. முப்படைகள், தொழிலாளர் பாதுகாப்புத்துறை, தமிழ்நாடு சிறப்பு காவல் அணி, தேசிய மாணவர் பணி, தமிழ்நாடு காவல் வாத்திய குழு உள்ளிட்டோர் இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

தொடர்ந்து, பள்ளி, கல்லூரி மாணவிகளின் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன. முதல்வர் ஜெயலலிதாவின் சாதனைகளை விளக்கும் பல்வேறு துறைகளின் வாகனங்களும் இந்த ஊர்வலத்தில் இடம்பெற்றிருந்தன. குடியரசு தின விழா, வருகிற 26ம் தேதி (செவ்வாய்க்கிழமை) காமராஜர் சாலையில் காந்தி சிலை அருகில் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி ஜனவரி 26 மற்றும் ஒத்திகை நாட்களான ஜனவரி 20, 22 மற்றும் 24 ஆகிய தேதிகளில் (4 நாட்களுக்கு) போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளன.

போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ள சாலைகள்:

காமராஜர் சாலையில், கலங்கரை விளக்கம் முதல் போர் நினைவுச்சின்னம் வரை காலை 6 மணி முதல் 10 மணி வரை வாகனங்கள் அனுமதி கிடையாது.

அடையாறு பகுதியிலிருந்து காமராஜர் சாலையில் பிராட்வே நோக்கி செல்லும் சரக்கு மற்றும் வணிக வாகனங்கள் கிரீன்வேஸ் சாலை சந்திப்பிலிருந்து ஆர்.கே.மடம் ரோடு, வி.கே.அய்யர் சாலை, தேவநாதன் சாலை, செயின்ட் மேரிஸ் சாலை, ராமகிருஷ்ணா மடம் சாலை, லஸ் சந்திப்பு, லஸ் சர்ச் சாலை, கற்பகாம்பாள் நகர், சிவசாமி சாலை, நீல்கிரீஸ் சாலை சந்திப்பு, மியூசிக் அகாடமி, ராயப்பேட்டை அரசு மருத்துவமனை, ராயப்பேட்டை மணிக்கூண்டு, ஒயிட்ஸ் சாலை, ஸ்மித் சாலை, அண்ணாசாலை வழியாக பிராட்வே சென்றடைய வேண்டும்.

போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ள சாலைகள்:

போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ள சாலைகள்:

காமராஜர் சாலையில், கலங்கரை விளக்கம் முதல் போர் நினைவுச்சின்னம் வரை காலை 6 மணி முதல் 10 மணி வரை வாகனங்கள் அனுமதி கிடையாது.

அடையாறு பகுதியிலிருந்து காமராஜர் சாலையில் பிராட்வே நோக்கி செல்லும் சரக்கு மற்றும் வணிக வாகனங்கள் கிரீன்வேஸ் சாலை சந்திப்பிலிருந்து ஆர்.கே.மடம் ரோடு, வி.கே.அய்யர் சாலை, தேவநாதன் சாலை, செயின்ட் மேரிஸ் சாலை, ராமகிருஷ்ணா மடம் சாலை, லஸ் சந்திப்பு, லஸ் சர்ச் சாலை, கற்பகாம்பாள் நகர், சிவசாமி சாலை, நீல்கிரீஸ் சாலை சந்திப்பு, மியூசிக் அகாடமி, ராயப்பேட்டை அரசு மருத்துவமனை, ராயப்பேட்டை மணிக்கூண்டு, ஒயிட்ஸ் சாலை, ஸ்மித் சாலை, அண்ணாசாலை வழியாக பிராட்வே சென்றடைய வேண்டும்.

அண்ணாசாலை வழியாக...

அண்ணாசாலை வழியாக...

அடையாறு பகுதியிலிருந்து காமராஜர் சாலையில் பிராட்வே நோக்கி செல்லும் பிற வாகனங்கள் (மாநகர பஸ்கள் உள்பட) சாந்தோம் நெடுஞ்சாலை மற்றும் கச்சேரி சாலை சந்திப்பில் கச்சேரி சாலை நோக்கி திருப்பப்படும். அவைகள் கச்சேரி சாலை, லஸ் சந்திப்பு, கற்பகாம்பாள் நகர், சிவசாமி சாலை, நீல்கிரீஸ் சாலை சந்திப்பு, மியூசிக் அகாடமி, ராயப்பேட்டை அரசு மருத்துவமனை, ராயப்பேட்டை மணிக்கூண்டு, ஸ்மித் சாலை, அண்ணா சாலை வழியாக பிராட்வே சென்றடையலாம்.

டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை

டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை

டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் காந்தி சிலை நோக்கி செல்லும் மாநகர பஸ் (தடம் எண் 27-டி) ராதாகிருஷ்ணன் சாலை மற்றும் வி.எம். தெரு சந்திப்பில் ராயப்பேட்டை நெடுஞ்சாலை வழியாக திருப்பிவிடப்பட்டு, அவைகள் வி.எம். தெரு, ராயப்பேட்டை நெடுஞ்சாலை, லஸ் சந்திப்பு, ராமகிருஷ்ணா மடம் சாலை, மந்தைவெளி சந்திப்பு, தெற்கு கெனால் பேங்க் ரோடு, சீனிவாசாபுரம் வழியாக பட்டினப்பாக்கம் சென்றடைய வேண்டும்.

மயிலாப்பூர் சந்திப்பு

மயிலாப்பூர் சந்திப்பு

அதேபோல மயிலாப்பூர் சந்திப்பிலிருந்து சிவசாமி சாலை வழியாக காந்தி சிலை நோக்கி வரும் மாநகர பேருந்துகள் (21-ஜி), ராயப்பேட்டை நெடுஞ்சாலை, ராயப்பேட்டை மேம்பாலம் நோக்கி திருப்பி விடப்பட்டு, அவை ராயப்பேட்டை மேம்பாலம், ராயப்பேட்டை நெடுஞ்சாலை, ராயப்பேட்டை மணிக்கூண்டு, ஒயிட்ஸ் சாலை, ஸ்மித் சாலை, அண்ணா சாலை வழியாக பிராட்வே சென்றடைய வேண்டும்.

அண்ணாசதுக்கம் செல்லும் பேருந்துகள்

அண்ணாசதுக்கம் செல்லும் பேருந்துகள்

அதே போன்று மயிலாப்பூர் சந்திப்பிலிருந்து சிவசாமி சாலை வழியாக அண்ணாசதுக்கம் நோக்கி வரும் மாநகர பஸ்கள் (45-பி, 12-ஜி) ஆகியவை நீல்கிரீஸ் சாலை சந்திப்பு, மியூசிக் அகாடமி, ராயப்பேட்டை அரசு மருத்துவமனை, ராயப்பேட்டை மணிக்கூண்டு, ஒயிட்ஸ் சாலை, ஸ்மித் சாலை, அண்ணா சாலை, வாலாஜா சாலை வழியாக அண்ணாசதுக்கம் சென்றடைய வேண்டும். டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் காந்தி சிலை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் நடேசன் சாலை சந்திப்பில் டாக்டர் நடேசன் சாலை வழியாக திருப்பி விடப்படும்.

கெனால் சாலை சந்திப்பு வரை...

கெனால் சாலை சந்திப்பு வரை...

டாக்டர் நடேசன் சாலை மற்றும் அவ்வை சண்முகம் சாலை சந்திப்பு வழியாக காமராஜர் சாலை நோக்கி வரும் வாகனங்கள் ஐஸ் அவுஸ் சந்திப்பு நோக்கி திருப்பிவிடப்படும். டாக்டர் பெசன்ட் சாலையிலிருந்து காமராஜர் சாலை நோக்கி வரும் வாகனங்கள் பெசன்ட் சாலை ரவுண்டானாவில் ஐஸ் அவுஸ் நோக்கி திருப்பிவிடப்படும். பாரதி சாலை மற்றும் பெல்ஸ் ரோடு சந்திப்பில் காமராஜர் சாலை நோக்கி வரும் வாகனங்கள் பாரதி சாலை மற்றும் பெல்ஸ் ரோடு சந்திப்பில் பெல்ஸ் ரோடு நோக்கி திருப்பி விடப்படும். வாலாஜா சாலை மற்றும் பெல்ஸ் ரோடு சந்திப்பில் உழைப்பாளர் சிலை நோக்கி வரும் வாகனங்கள் (மாநகர பஸ்கள் தவிர்த்து) பெல்ஸ் ரோடு வழியாக திருப்பிவிடப்படும். மாநகர பஸ்கள் கெனால் சாலை சந்திப்பு வரை அனுமதிக்கப்படும்.

தற்காலிக பேருந்து நிறுத்தம்

தற்காலிக பேருந்து நிறுத்தம்

அண்ணாசதுக்கம் அருகில் உள்ள பஸ் நிறுத்தம் தற்காலிகமாக வாலாஜா சாலை விருந்தினர் மாளிகை அருகில் மாற்றப்படும். பாரிமுனையில் இருந்து ராஜாஜி சாலை மற்றும் காமராஜர் சாலை வழியாக அடையாறு நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் ரிசர்வ் வங்கி சுரங்கபாதையில் திருப்பிவிடப்பட்டு ராஜா அண்ணாமலை மன்றம் வழியாக வாலாஜா பாயிண்ட், அண்ணா சாலை, அண்ணா சிலை, ஜெனரல் பேட்டர்ஸ் ரோடு, ஒயிட்ஸ் ரோடு, அண்ணா சாலை, அமெரிக்க தூதரகம் சர்வீஸ் ரோடு, கதீட்ரல் சாலை, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, காரணீசுவரர் பகோடா தெரு, சாந்தோம் சாலை வழியாக அடையாறு சென்றடைய வேண்டும். வாலாஜா பாயிண்ட் மற்றும் அண்ணா சாலை சந்திப்பிலிருந்து போர் நினைவுச்சின்னம் நோக்கி வாகனங்கள் வர அனுமதி இல்லை.

English summary
The Chennai city traffic police will introduce traffic diversions on January 22, 24 and 26 for rehearsals for the Republic Day celebrations on Kamarajar Salai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X