For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மின்விநியோகத்தை தனியார் மயமாக்க எதிர்ப்பு.. டிசம்பர் 7-ல் நாடு தழுவிய வேலைநிறுத்தம் அறிவிப்பு

தனியார் மயமாகும் மின்விநியோகத்தை கண்டித்து வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

By A S Ramesh
Google Oneindia Tamil News

ஈரோடு: மின்விநியோகத்தை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு தமிழக அரசு ஒத்துழைப்பு அளிக்க கூடாது என்றும், மின்விநியோகத்தை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் முடிவை கண்டித்து வரும் டிசம்பர் 7-ம் தேதி இந்திய அளவில் வேலைநிறுத்த போராட்டம் நடத்த உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின்வாரிய பொறியாளர் சங்கத்தின் 52-வது மாநில பொது குழு கூட்டம் ஈரோடு அருகேயுள்ள வில்லரசம்பட்டியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களை பட்டயம் படித்த பொறியாளர்களை கொண்டு நிரப்ப வேண்டும், நிலுவையிலுள்ள கோரிக்கைகளை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன

resistance to privatization of power supply

இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அச்சங்கத்தின் பொதுச்செயலாளர் பத்ரிநாராயணன், ஸ்டெர்லைட் மூடப்பட்டதால் காப்பர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்றார்.

மின்விநியோகத்தை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் முடிவை கண்டித்து வரும் டிசம்பர் 7-ம் தேதி இந்திய அளவில் வேலைநிறுத்த போராட்டம் நடைபெறவுள்ளதாகவும் தமிழகத்தை பொறுத்தவரை மத்திய அரசின் இந்த முயற்சிக்கு தமிழக அரசு ஒத்துழைப்பு அளிக்கக் கூடாது எனவும் வலியுறுத்தினார்.

English summary
A nationwide strike on December 7 has been announced to protest the privatization of power supply. The Tamil Nadu government has not been asked to cooperate with the Central Government's privatization.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X