For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரிசோர்ஸ் சாட் -2ஏ வை சுமந்து விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி சி-36

ஸ்ரீஹரிகோட்டாவில் ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி சி-36 ராக்கெட் மூலம் இஸ்ரோவின் 38வது செயற்கைகோள் ரிசோர்ஸ் சாட்-2ஏ விண்ணில் ஏவப்பட்டது.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ்தவான் விண்வெளி நிலையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து ரிசோர்ஸ் சாட் -2ஏ செயற்கைக்கோள் இன்று காலை பி.எஸ்.எல்.வி சி-36 ராக்கெட் ஏவுவதற்கான கவுண்டவுன் நேற்று இரவு 10.25 மணிக்கு தொடங்கியது. இன்று காலை 10.24 மணிக்கு ரிசோர்ஸ் சாட் -2ஏ செயற்கைக்கோளை எடுத்துச்சென்று பிஎஸ்எல்வி சி-36 வெற்றிகரமான விண்ணில் பாய்ந்தது.

இதன் மூலம் விண்வெளி அறிவியலில் இந்தியா மேலும் ஓர் சாதனை படைத்துள்ளது. ரிசோர்ஸ் சாட் -2ஏ செயற்கைக்கோளை எடுத்துச்சென்ற பிஎஸ்எல்வி சி-36 விண்ணில் நிலை நிறுத்தியது.

இந்த செயற்கைக்கோள் புவியில் இருந்து 817 கி.மீ தூரத்தில் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்படுகிறது. 5 ஆண்டுகள் ஆயுட்காலம் கொண்ட இந்த செயற்கைக்கோள் மூலம், புவியில் உள்ள இயற்கை வளங்களை துல்லியமாக படம்பிடிக்க உதவுகிறது.

கடந்த 2003ம் அண்டு ரிசோர்ஸ் சாட்-1 செயற்கைக்கோளையும், 2011-ம் ஆண்டு ரிசோர்ஸ் சாட்-2 செயற்கைக்கோளையும் இஸ்ரோ விண்ணில் ஏவியது. இதையடுத்து ரிசோர்ஸ் சாட்-2ஏ செயற்கைக்கோளை ஏவ இஸ்ரோ திட்டமிட்டது. இதனை 1,235 கிலோ எடையில், புவியை கண்காணிக்க மற்றும் தொலை உணர்வுக்காக தயாரிக்கப்பட்டது. இது புவியை கண்காணிக்கை, இயற்கையை படம் பிடிக்க என மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

English summary
The thirty eight flight of ISRO’s workhorse rocket, PSLV-C36 was launched for a Wednesday launch from the First Launch Pad (FLP), at Satish Dhawan Space Centre SHAR, Sriharikota.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X