For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மோசடி பேர்வழி கூப்பிட்டா மோடி ஏன் ஓடி வரணும்... ஓய்வு பெற்ற நீதிபதி அரிபரந்தாமன் சுளீர்

வனப் பகுதிகளை மோசடி செய்து ஆதிவாசி மக்களை ஏமாற்றி இடங்களை அபகரித்து வரும் மோசடி பேர்வழி ஜக்கி வாசுதேவ் கூட்டால் பிரதமர் மோடி ஏன் ஓடி வர வேண்டும் என்று ஓய்வு பெற்ற நீதிபதி அரி பரந்தாமன் கேள்வி எழுப்பிய

Google Oneindia Tamil News

சென்னை: ஈஷா யோகா மையத்தின் சார்பாக ஜக்கி வாசுதேவ் மகாசிவராத்திரியான நாளை சிவன் சிலை திறப்பு விழா நடத்துகிறார். இந்த நிகழ்ச்சிக்கு மோசடி பேர்வழியான ஜக்கி வாசுதேவ் அழைத்தால் பிரதமர் மோடி ஏன் ஓடி வருகிறார் என்று ஓய்வு பெற்ற நீதிபதி அரி பரந்தாமன் கேள்வி எழுப்பியுள்ளார்.

கோவையில் மேற்கு தொடர்ச்சி மலையில் அடிவாரத்தின் ஒரு பகுதியில் 112 அடி உயரத்தில் சிவனின் சிலையை ஈஷா யோகா மையத்தின் சார்பில் ஜக்கி வாசுதேவ் நாளை திறக்க உள்ளார். இந்த விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி அழைக்கப்பட்டுள்ளார். ஆதிவாசி நிலங்களை மோசடி செய்துள்ள ஜக்கி வாசுதேவ் நிகழ்ச்சிக்கு பிரதமர் வரக் கூடாது என்று சமூக ஆர்வலர்கள், ஆதிவாசி கூட்டமைப்பு, திராவிடர் விடுதலைக் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம் போன்ற அமைப்பு போராட்டம் நடத்தி வருகின்றன.

Retired Judge slams Modi visits

இதுதொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி அரிபரந்தாமன், மலை அடிவாரத்தில் ஆதிவாசி மக்கள் குடியிருக்கும் பகுதிகளை ஏமாற்றி அபகரித்து கொண்டவர் ஜக்கி வாசுதேவ் என்றும் இதுதொடர்பான பல்வேறு வழக்குகள் நீதிமன்றத்தில் இருக்கிறது என்றும் கூறினார்.

ஒரு நாட்டின் பிரதமர் கார்ப்பரேட் சாமியாரின் நிகழ்ச்சி எப்படி வரலாம் என்றும் அவர் கேள்வி எழுப்பிய அரிபரந்தாமன், மோசடி பேர்வழி ஜக்கி வாசுதேவ் கூப்பிட்டால் ஏன் மோடி ஓடி வர வேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

ஈஷா யோகா மையத்தின் ஜக்கி வாசுதேவ் மீது, அனுமதி பெறாமல் கட்டப்பட்ட கட்டடங்கள், சலுகை விலையில் மின்சாரம், தொடர்ந்து கட்டுமானப் பரப்பை அதிகரித்துக் கொண்டே போவது உள்ளிட்ட பலவேறு வழக்குகள் நீதிமன்றத்தில் உள்ளன. குறிப்பாக நாளை சிலை திறக்கப்படுவதைத் தடுக்க வேண்டுமென தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தாக்கல் செய்த வழக்கு நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Retired Judge Hariparandhaman attacked Modi to come Coimbatore to attend Isha progremme.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X