For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னையை கண்டுகொள்ளாத தேசிய ஊடகங்களுக்கு ஆர்.ஜே. பாலாஜி 'பொளேர்'

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: உங்களுக்கு எல்லாம் சென்னை, தமிழகம் எப்படி இருக்கும் என்றே தெரியாது என்று தேசிய ஊடகங்கள் பற்றி ஆர்.ஜே. பாலாஜி இந்தியா டுடே கன்சல்டிங் ஆசிரியர் ராஜ்தீப் சர்தேசாயிடம் தெரிவித்தார்.

சென்னை வெள்ளத்தில் தத்தளித்த போது தேசிய ஊடகங்கள் அதை கண்டுகொள்ளவில்லை. மாறாக நாட்டில் சகிப்பத்தன்மை இல்லாதது பற்றி பேசிக் கொண்டிருந்தன. இந்தியா டுடே குழும கன்சல்டிங் ஆசிரியர் ராஜ்தீப் சர்தேசாய் மட்டும் சென்னை நிலவரம் பற்றி அவ்வப்போடு ட்வீட் செய்ததுடன், வீடியோ பிளாக் வெளியிட்டார். மேலும் சென்னை மழையை தேசிய ஊடகங்கள் கண்டு கொள்ளாமல் இருப்பதை தொடர்ந்து கண்டித்தும் வந்தார்.

இந்நிலையில் அவர் சென்னை வந்து மக்களை பேட்டி எடுத்தார்.

சகிப்பின்மை

இந்தியாவில் சகிப்புத்தன்மை இல்லை என்று கூறுவதை நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம். அப்படி எல்லாம் இல்லை என்று ஒரு பெண் தெரிவித்தார்.

தேசிய ஊடகங்கள்

நவம்பர் மாத துவக்கத்தில் இருந்து சென்னையில் கனமழை பெய்தது. ஆனால் தேசிய ஊடகங்கள் சகிப்புத்தன்மை இன்மை பற்றி விவாதித்துக் கொண்டிருந்ததை ஒப்புக் கொள்கிறேன் என்றார் ராஜ்தீப்.

RJ Balaji's Epic reply to Rajdeep Sardesai!

That reply!!! #RJBalajiRajdeep Sardesai: But it required a tragedy and flood waters like this for Chennai to wake up in a sense ?RJ Balaji: Even for you guys to wake up.We couldn't imagine his counter if he is in his form with his best voice!!Get well soon bro!! :) RJ Balaji

Posted by BIG FM's Balaji - cRosS tAlK on Monday, December 7, 2015

பாலாஜி

உங்களில் பலருக்கு ஆர்.ஜே.பாலாஜி யார் என்று தெரியாது. அதே போன்று தான் சென்னை, தமிழகம் எப்படி இருக்கும் என்பதும் உங்களில் பலருக்கு தெரியாது என்றார் பாலாஜி.

வெள்ளம்

மக்களை ஒருங்கிணைக்க, விழிப்படைய வைக்க வெள்ளம் போன்ற பேரிடர் தேவைப்படுகிறதா என்று ராஜ்தீப் கேட்க பாலாஜி கூறுகையில், இது உங்களையும் (மீடியா) விழிப்படைய வைக்க என்றார்.

English summary
RJ Balaji has slammed national media that stayed away from Chennai floods.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X