For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து... டிடிவி தினகரனுக்கு தொப்பிக்கு பதில் குல்லா மாட்டிய தேர்தல் ஆணையம்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டதன் மூலம் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல்வராகலாம் என்று கனவு கண்டிருந்த டிடிவி தினகரனின் தலையில் தேர்தல் ஆணையம் குல்லா கவிழ்த்துவிட்டத

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா புகாரை தொடர்ந்து தேர்தலை ரத்து செய்ததால் டிடிவி தினகரன் தலையில் தேர்தல் ஆணையம் குல்லா கவிழ்த்துவிட்டது.

ஜெயலலிதா மறைவை தொடர்ந்து ஆர்.கே.நகருக்கு ஏப்ரல் 12-ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதனால் அரசியல் கட்சிகள் போட்டி போட்டு கொண்டு வாக்குறுதிகளை அள்ளி வீசி தேர்தல் பணியாற்றின.

மக்களின் நாடித்துடிப்பை விளக்கும் வகையிலாக பார்க்கப்பட்ட இந்த தேர்தலில் அதிமுகவின் இரு அணிகளும், திமுக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன.

 பணம் சப்ளை

பணம் சப்ளை

இந்நிலையில் ஆர்.கே.நகர் மக்களை பணம் கொடுத்து விலைக்கு வாங்க தினகரன் தரப்பு ரூ.128 கோடி அளவில் செலவிட்டது. பறக்கும் படையினர் நியமிக்கப்பட்டு தேர்தல் ஆணையத்தால் முழுமையாக பணப்பட்டுவாடாவை தடுக்க முடியவில்லை. இதனால் ஒரு சில இடங்களில் செல்போன், வீட்டு உபயோக பொருள்கள், பரிசு பொருள்கள் என பொருள்களாக வாங்கி திருமண மண்டபத்தில் குவித்தனர்.

 ஐடி ரெய்டு

ஐடி ரெய்டு


இந்தநிலையில் கடந்த வெள்ளிக்கிழமை சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார், எம்ஜிஆர் பல்கலை துணை வேந்தர் கீதா லட்சுமி ஆகியோரது வீடுகளில் வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்தினர். இதில் ரூ.89 கோடி மதிப்பிலான பணம் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது. இது தொடர்பான சோதனை அறிக்கை தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டதை தொடர்ந்து நேற்று டெ்ல்லியில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, சிறப்பு தேர்தல் அதிகாரி ஆகியோருடன் ஆலோசனை நடைபெற்றது.

 தேர்தல் ரத்து

தேர்தல் ரத்து

ஆலோசனையின் முடிவில் தேர்தலை முறையாக நடத்தவும், சுதந்திரமாக நடத்தவும் இந்த தேர்தலை ரத்து செய்வதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இதனால் பலதரப்பினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த தேர்தலில் போட்டி போட்டு பணம் வழங்கிய அத்தனை பேருக்கு பே பே காட்டியது தேர்தல் ஆணையம்.

 குல்லா போட்டது

குல்லா போட்டது

குறிப்பாக, பணம் வினியோகித்த பட்டியலில் முதலிடம் வகிக்கும் டிடிவி தினகரனுக்கு தேர்தல் ஆணையம் குல்லா போட்டு விட்டது. பணத்தை வைத்து மக்களின் மனதை வாங்கி விடலாம் என்று தப்புக் கணக்கு போட்ட கட்சியினருக்கு நல்ல பாடம் புகட்டியது.

 நல்ல முடிவு

நல்ல முடிவு

மக்களுக்கு நன்றாக பணத்தை கொடுக்க விட்டுவிட்டு கடைசி நேரத்தில் தேர்தலை ரத்து செய்தது தேர்தல் ஆணையம் எடுத்த நல்ல முடிவாகும். இந்த முடிவின் மூலம் தொப்பி கோஷ்டியின் பணம் கரைந்ததுதான் மிச்சம். தேர்தல் ரத்தால் தொப்பிக்கு பதில் குல்லா கவிழ்த்தப்பட்டுள்ளது, இரட்டை மின்விளக்கு பியூஸ் போய்விட்டது, உதய சூரியன் உதிக்கவில்லை, தாமரை மலரவில்லை, முரசு கொட்டவில்லை, படகு கரை சேரவில்லை.

English summary
Election Commission taught a lesson those who involved in money distributing to voters publically.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X