For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆர்.கே நகரில் இதுவரை 117 தேர்தல் முறைகேடு வழக்குகள் பதிவு : மாநகர காவல் ஆணையர் பேட்டி

ஆர்.கே நகரில் இதுவரை 117 தேர்தல் முறைகேடு வழக்குகள் பதி்யப்பட்டு உள்ளதாக காவல் ஆணையர் தெரிவித்து உள்ளார்.

By Mohan Prabhaharan
Google Oneindia Tamil News

சென்னை : ஆர்.கே இதுவரை 117 தேர்தல் முறைகேடு வழக்குகள் பதியப்பட்டு உள்ளதாக சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்து உள்ளார்.

ஆர்.கே நகருக்கான இடைத்தேர்தல் வருகிற 21ம் தேதி நடைபெற உள்ளது. அனைத்து கட்சிவேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், காவல்துறை மற்றும் தேர்தல் ஆணையஅதிகாரிகள் ஆர்.கே நகர் முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர். இதுகுறித்து இன்றுதண்டையார்பேட்டை மண்டல அலுவலகத்தில் மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன், சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் மற்றும் தேர்தல் அலுவலர் ஆகியோர்பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்.

கூடுதல் ராணுவப்படை வருகை

கூடுதல் ராணுவப்படை வருகை

அப்போது பேசிய மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன், இதுவரை ஆர்.கே நகரில் 65 பறக்கும்படைகள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு உள்ளதாகவும், அதில் 20 குழுக்கள் தொகுதியில் நடக்கும்அனைத்தையும் வீடியோ பதிவு செய்து வருவதாகவும் குறிப்பிட்டார்.மேலும், இதுவரை துணை ராணுவம்5 கம்பெனி பணியில் இருப்பதாகவும் கூடுதலாக் இன்னும் 5 கம்பெனி ராணுவப் படை வரஇருப்பதாகவும் கூறினார். தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் அனைத்து வாகனங்களும்அடையாள அட்டை கொடுக்கப்பட்டு இருக்கிறது என்றும் தெரிவித்தார்.

தீவிர வாகன பரிசோதனை

தீவிர வாகன பரிசோதனை

அடையாள அட்டை இல்லாத 80 வாகனங்களை பறிமுதல் செய்து அவை பாலிடெக்னிக் கல்லூரிவளாகத்தில் நிறுத்தப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்து உள்ளார்.ஆர்.கே நகர் இடைத்தேர்தல்பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து சென்னை மாநகர காவல் ஆணையர் கூறும்போது,தொகுதிமுழுவதுக்கும் 12 வாகன சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. சென்னை புறநகர் பகுதியில் 9சோதனை மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளதாகவும், அவர்கள் தொடர்ந்து தொகுதிக்கு உள்ளே வரும்வாகனங்கள் அனைத்தையும் சோதனையிட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு

கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு

சிறப்பு பறக்கும் படை , வீடியோ கண்காணிப்பு குழு, கம்பெனி ராணுவப்படை மற்றும் 100 ஆயுதப்படைகாவலர்கள் ஆகியோர் தற்போது பணியில் இருப்பதாகவும், 2 கூடுதல் ஆணையர் தலைமையில் சுமார்2000 காவல்துறை அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும்,கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளும் விரைவில் ஏற்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

பறிமுதல் செய்யப்பட்ட பணம்

பறிமுதல் செய்யப்பட்ட பணம்

இதுவரை நடந்த சோதனைகளில் 5,31,400 ரூபாய் ரொக்கமும், 500 குக்கர்களும், 14 அனுமதியில்லாததுண்டு பிரசுரங்களும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. 112 தேர்தல் முறைகேடு வழக்குகள்பதியப்பட்டு, 13 பேர் கைது செய்யப்பட்டு உள்ளார்கள் என்றும் சென்னை மாநகர காவல் ஆணையர்தெரிவித்து உள்ளார்.

English summary
RK Nagar now brought Under high alert by Police and Election Commission .
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X