For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

"அம்மா" தொகுதியில் ஓங்கிக் குத்திய வாக்காளர்கள்.. மீண்டும் "ஆஃபரா" அல்லது "ஆப்பா"?

Google Oneindia Tamil News

சென்னை: தலைநகர் சென்னையில் உள்ள 16 தொகுதிகளிலும் கடந்த தேர்தலை விட இந்த முறை குறைந்த வாக்குகளே பதிவாகியுள்ளது. இது ஒரு வகையில் அதிமுகவுக்குச் சாதகமானது என்று கூறப்பட்டாலும் கூட அதை உறுதியாகச் சொல்ல முடியாத நிலை.

சென்னை மாவட்டத்தில் உள்ள 16 தொகுதிகளில், முதல்வர் ஜெயலலிதா போட்டியிட்டுள்ள ஆர்.கே.நகரில்தான் அதிக வாக்குகள் பதிவாகியுள்ளன.

மிகக் குறைந்தபட்சமாக மயிலாப்பூர் மற்றும் துறைமுகத்தில் வாக்குப் பதிவு நடந்துள்ளது. சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் பதிவான வாக்குகள் விவரம்:

60க்கு மேல் 8 தொகுதிகள்

60க்கு மேல் 8 தொகுதிகள்

சென்னையில் உள்ள தொகுதிகளில 60 மற்றும் அதற்கு மேல் வாக்குகள் பதிவான தொகுதிகள் 8 ஆகும்.

எட்டில் முதல் ஆர்.கே.நகர்

எட்டில் முதல் ஆர்.கே.நகர்

இந்த எட்டு தொகுதிகளில் முதலிடத்தில் இருப்பது முதல்வர் ஜெயலலிதா போட்டியிட்டுள்ள ஆர்.கே.நகர் ஆகும். இங்கு பதிவாகியுள்ள வாக்குகள் 67 சதவீதமாகும்.

2வது இடம் பெரம்பூர்

2வது இடம் பெரம்பூர்

2வது இடத்தில் பெரம்பூர் தொகுதி வருகிறது. இங்கு 65 சதவீத வாக்குகள் பதிவாகின. இங்கு பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர். தனபாலன் போட்டியிட்டுள்ளார்.

3வது இடம் கொளத்தூருக்கு

3வது இடம் கொளத்தூருக்கு

3வது இடம் திமுக. பொருளாளர் மு.க.ஸ்டாலின் போட்டியிட்டுள்ள கொளத்தூருக்குக் கிடைத்துள்ளது. இங்கு 64.4 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

சேப்பாக்கம் -திருவல்லிக்கேணி

சேப்பாக்கம் -திருவல்லிக்கேணி

பிற தொகுதிகளில் திரு.வி.க.நகர் 63.03, எழும்பூர் 62.5, ராயபுரம் 62.6, சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி 62, அண்ணா நகர் 60.87 என வாக்குகள் பதிவாகியுள்ளன.

50 டூ 60க்குள் 8

50 டூ 60க்குள் 8

50 முதல் 60 சதவீதம் வரையிலான வாக்குகள் மீதமுள்ள 8 தொகுதிகளில் பதிவாகியுள்ளன. அதில் அதிகபட்சமான வாக்குகளைக் கண்ட தொகுதி ஆயிரம் விளக்கு ஆகும். அங்கு 59.93 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

சைதாப்பேட்டை- மயிலாப்பூர்

சைதாப்பேட்டை- மயிலாப்பூர்

பிற தொகுதிகளில் சைதாப்பேட்டை 58.18, வில்லிவாக்கம் 58, தியாகராய நகர் 58, விருகம்பாக்கம் 57.9, வேளச்சேரி 57.7, துறைமுகம் 55.27, மயிலாப்பூர் 55 என வாக்குகள் பதிவாகியுள்ளன.

English summary
Among the 16 seats in Chennai district, CM Jayalalitha contested RK Nagar has registered highest voters turnout.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X