For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கொள்ளிடத்தில் தடுப்பணை கட்ட வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி மாபெரும் பேரணி

கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்ட வேண்டும் என்று வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி மாபெரும் கண்டன பேரணியை நிகழ்த்தியது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

மயிலாடுதுறை: கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்ட வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கோரிக்கை விடுத்து நாகை மாவட்டம் கடலங்குடியில் இருந்து பதுப்பட்டினம் வரை 50 கி.மீ. தூரம் மாபெரும் கண்டன பேரணியை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.

நாகை மாவட்டம் குமாரமங்கலத்துக்கும், கடலூர் மாவட்டம் ஆதனூருக்கும் இடையே கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணைக் கட்ட வேண்டும் என்று மறைந்த முதல்வர் ஜெயலலிதா 110 விதியின் கீழ் அறிவித்தார். இந்த திட்டத்துக்கு நிதி ஒதுக்கப்பட்டது.

Road rally which demands to build check dams across Kollidam

தடுப்பணை கட்டுவதற்காக மண்ணின் ஸ்திரத்தன்மை குறித்து ஆய்வு செய்யும் பணிகளும் முடிவடைந்து அந்த திட்டத்துக்கு ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார். ஆனால் அவர் மறைவுக்கு பின்னர் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

அந்த தடுப்பணையை உடனே கட்டவேண்டும் என பல்வேறு கட்சியினரும், பல விதமான போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மயிலாடுதுறை தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இன்று கடலங்குடியில் இருந்து புறப்பட்டு நாகை மாவட்டத்தில் கடைசி பகுதியான புதுப்பட்டினம் வரை 50 கி.மீ. தூரத்துக்கு பேரணியாக சென்றனர்.

இதன் பிறகும் அணைக் கட்டவில்லை தமிழக அரசை திரும்பி பார்க்க வைக்கும் அளவில் மக்களை திரட்டி பெரும் போராட்டம் நடத்துவோம் என எச்சரிக்கை விடுத்தனர்.

English summary
Viduthalai siruthaigal party today conducted a rally which demands to build check dams across Kollidam as soon as possible.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X