For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திண்டுக்கல் அருகே அய்யலூரில் மதுக்கடைக்கு எதிராக மறியல்.. 250 பேர் கைது

திண்டுக்கல் அருகே குடியிருப்பு பகுதிக்குள் மதுக்கடை திறக்கவுள்ளதாக கூறி அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மறியலில் ஈடுபட்ட 250 பேரை போலீஸார் கைது செய்தனர்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே குடியிருப்பு பகுதிக்குள் மதுக்கடை திறக்கவுள்ளதாக கூறி அங்கு எதிர்ப்பு தெரிவித்து மறியலில் ஈடுபட்ட 250 பேரை போலீஸார் கைது செய்தனர்.

தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் மதுபானக் கடைகளை அகற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் தமிழக நெடுஞ்சாலையில் இருந்த 3500-க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டன. இதனால் டாஸ்மாக்கில் பணியாற்றிய ஆயிரக்கணக்கானோர் வேலையிழந்துள்ளனர்.

இதனால் டாஸ்மாக் அதிகாரிகளின் உத்தரவின்பேரில் தமிழகம் முழுவதும் ஊருக்குள் கடையை கொண்டு வர இடம் பார்த்து வருகின்றனர் ஊழியர்கள். இந்நிலையில் அய்யலூரில் குடியிருப்புக்குள் மதுக்கடை திறக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

Road roko in Dindigul, opposing TASMAC shop

இதை அறிந்த அப்பகுதி மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த போலீஸார் சமரச பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் கலையாததால் 250 பேரை கைது செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

English summary
People of Ayyalur, Dindigul protest for opening TASMAC shops in residential places. 250 were arrested.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X