For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நிர்மலா தேவி வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி.. முக்கிய ஆவணங்களை அழிக்க சதி?

பேராசிரியை நிர்மலா தேவி வீட்டின் பூட்டை உடைத்து நடைபெற்ற கொள்ளை முயற்சி சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    நிர்மலா தேவி வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி-வீடியோ

    விருதுநகர்: பேராசிரியை நிர்மலா தேவி வீட்டின் பூட்டை உடைத்து நடைபெற்ற கொள்ளை முயற்சி சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    புதுக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியையான நிர்மலா தேவி, கல்லூரி மாணவிகளை மறைமுகமாக பாலியல் தொழிலுக்கு அழைக்கும் ஆடியோ வெளியானது.

    இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்களும் மாணவ, மாணவிகளும் போராட்டத்தில் குதித்தனர். இந்நிலையில் நிர்மலா தேவி விவகாரம் தொடர்பாக ஒரு புறம் சிபிசிஐடி போலீஸாரும் ஒரு புறம் ஓய்வு பெற்ற சந்தானம் குழுவினரும் விசாரித்து வந்தனர்.

    நிர்மலா தேவி விவகாரத்தில் விசாரணையை நிறைவு செய்த சந்தானம் குழு வரும் 15ஆம் தேதி அறிக்கையை தாக்கல் செய்யவுள்ளது.

    Robbery attempt in Professor Nirmala Devi house

    நிர்மலாதேவிக்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அருப்புக்கோட்டையை அடுத்த ஆத்திப்பட்டி காவியாநகரில் உள்ள நிர்மலா தேவியின் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி நடைபெற்றுள்ளது.

    நிர்மலா தேவி நீதிமன்ற காவலில் உள்ளதால் அவரது வீட்டை பூட்டி சாவி அவரது அண்ணணிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வீட்டின் வெளிப்புற பூட்டு உடைக்கப்பட்டிருப்பதாக அக்கம்பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் நிர்மலா தேவியின் வீட்டில் ஆவணங்களை அழிக்க நடந்த முயற்சியா அல்லது பணம், நகைகளை கொள்ளையடிக்க நடந்த முயற்சியா என காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். நிர்மலா தேவி வீட்டில் நடைபெற்ற கொள்ளை முயற்சி சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    English summary
    Robbery attempt in Professor Nirmala Devi house. police inquires that whether to destroy the documents. This incident shocks in the area.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X