For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சர்வர் வேலை பார்க்கும் 4 ரோபோட்கள்.. சென்னை ஹோட்டல் நிகழ்த்திய சாதனை!

சென்னையில் செயல்படும் ஹோட்டல் ஒன்று நான்கு ரோபோட்களை பணிக்கு அமர்த்தி இருக்கிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் செயல்படும் ஹோட்டல் ஒன்று நான்கு ரோபோட்களை பணிக்கு அமர்த்தி இருக்கிறது. ரோபோட் என்று பெயரிடப்பட்டு இருக்கும் இந்த ஹோட்டல் சென்னை, பழைய மஹாபலிபுரம் சாலையில் அமைந்து இருக்கிறது.

வெங்கடேஷ் ராஜேந்திரன் மற்றும் கார்த்திக் கண்ணன் என்ற இரண்டு நபர்கள் சேர்ந்து இந்த ஹோட்டலை நடத்துகிறார்கள். இங்கு ரோபோட்கள் வேலை செய்வதால் தற்போது இந்தியா முழுக்க இந்த ஹோட்டல் வைரல் ஆகி உள்ளது.

தினமும் இந்த ஹோட்டலுக்கு நிறைய வாடிக்கையாளர்கள் அலை மோதுகின்றனர். மேலும் இந்த ஹோட்டல் குறித்து பலரும் சமூக வலைத்தளங்களில் எழுதி வருகின்றனர்.

ரோபோட்

ரோபோட்

சென்னை பழைய மஹாபலிபுரம் சாலையில் 'மோ-மோ' என்ற பிரசித்திபெற்ற ஹோட்டல் ஒன்று இருக்கிறது. தற்போது இந்த ஹோட்டல் 'ரோபோட்' என்று பெயர் மாற்றப்பட்டு புதுப்பொலிவுடன் செயல்பட தொடங்கி இருக்கிறது. இந்த ஹோட்டலில் தற்போது 4 ரோபோட்கள் சர்வர்களாக வேலை செய்கின்றன. இந்தியாவிலேயே முதல் முறையாக சென்னையில் இந்த ஹோட்டலில் தான் ரோபோட்க்கள் பணிக்கு அமர்த்தப்பட்டு இருக்கிறது.

ஆர்டர் செய்வது எப்படி

ஆர்டர் செய்வது எப்படி

இந்த ஹோட்டலில் ஆர்டர் செய்வதற்கு என்று தனி வசதி உருவாக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி ஒவ்வொரு இருக்கைக்கு முன்பும் சிறிய டேப்லேட் ஒன்று இருக்கும். அந்த டேப்லெட் மூலம் நாம் உணவை ஆர்டர் செய்யலாம். அது உள்ளே சமைக்கு இடத்திற்கு சென்றுவிடும். பின் இந்த உணவை ரோபோட்கள் எடுத்துவந்து சரியான டேபிளில் பரிமாறும் என்று கூறப்படுகிறது. தற்போது இந்த விஷயம் அங்கு மிகவும் சரியாக செயல்பட்டு வருகிறது.

செயல்படுவது எப்படி

செயல்படுவது எப்படி

இந்த ரோபோட்கள் 'ஆர்டிபிசியால் இண்டலிஜென்ஸ்' என்ற தொழில்நுட்பத்தின் மூலம் செயல்படுகிறது. இதனுள் பெரிய அளவில் பேட்டரிகள் இருக்கும். இதை யாரும் ரிமோட் மூலம் கட்டுப்படுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை. இதில் எந்த டேபிளில் உணவை கொடுக்க வேண்டும் என்று டேபிள் எண்ணை கொடுத்தால் போதும் தானாக அதுவே உணவை கொண்டு போய் பரிமாறும். மேலும் யாராவது இடையில் வந்தால் அப்படியே நின்று வழிவிடும்.

என்ன மாதிரியான உணவு

என்ன மாதிரியான உணவு

இந்த ஹோட்டலில் பெரும்பாலும் தாய்லாந்து மற்றும் சீன உணவுகள் கிடைக்கும். இரண்டு பேர் அமரும் டேபிளை 1,000 ரூபாய் கொடுத்து புக் செய்ய வேண்டும். இந்த ஹோட்டல் நிறுவனர்களில் ஒருவரான வெங்கடேஷ் ஏற்கனவே 'விமானம்' போல் காட்சியளிக்கும் ஹோட்டல் ஒன்றை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த ஹோட்டலுக்கு கூட்டம் அலைமோதுகிறது.

English summary
A Robot works in Chennai hotel named 'ROBOT' as server. The hotel formally named as MOMO which is in Chennai’s Old Mahabalipuram Road (OMR) that serve food through Robots.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X