For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆட்கடத்தல், விபச்சாரத்தில் சிக்கும் ரோஹிங்கியா அகதிகள்!

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: வங்கதேசத்தில் அமைந்திருக்கும் உலகின் மிகப்பெரிய அகதி முகாம்களாக பார்க்கப்படும் ரோஹிங்கியா அகதி முகாம்களில் உள்ள மக்கள் ஆட்கடத்தல், விபச்சாரம் உள்ளிட்ட சுரண்டலில் சிக்கும் அவலம் வளரத்தொடங்கியுள்ளது.

இந்த நெருக்கடியில் சிக்கியுள்ள பெண்கள் போலியான வேலைகளில் சிக்கி விபச்சாரத்துக்குள் தள்ளப்படுவதாக ஐ.நா. வேதனை தெரிவித்துள்ளது.

Rohingya refugees in camps, have been kidnaped, says reports

அத்துடன், முகாமின் மக்கள் தொகையில் 56 சதவீதக்கும் மேலாக உள்ள 17 வயதிற்குட்பட்ட சிறியவர்கள் ஆட்கடத்தலின் முக்கிய இலக்காகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

"முகாமில் பாலின அடிப்படையிலான வன்முறை நடக்கின்றது. அதாவது பாலியல் வன்முறைக்கான வாய்ப்பு அதிகம். ஆட்கடத்தல் நடக்கின்றது; பெண்கள் கடத்தப்படுகின்றனர்" எனத் அவசரகால உதவி திட்டத்தின் மேலாளர் டாம் பெட்கோஸ் தெரிவித்திருக்கிறார்.

கடந்த ஆகஸ்ட் 2017ல் மியான்மரில் ஏற்பட்ட வன்முறைகளைத் தொடர்ந்து சுமார் 7 லட்சம் ரோஹிங்கியா அகதிகள் அண்டை நாடான வங்கதேசத்தில் தஞ்சமடைந்தனர். மியான்மரின் ரக்ஹைன் பகுதியில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்களை இனச்சுத்திகரிப்போடு ஒப்பிட்ட ஐக்கிய நாடுகள் சபை 'இனச்சுத்திகரிப்பை எவ்வாறு மேற்கொள்ளலாம் என்பதை வெளிப்படுத்தும் பாடப்புத்தகம் இது' எனக் குறிப்பிட்டிருந்தது.

English summary
Rohingya refugees in camps, have been kidnaped and raped says reports.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X