For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மன்னார்குடி மாஃபியா சும்மா விடமாட்டார்கள் என சிலர் எச்சரித்தனர்.. பட் ஐ டோன்ட் கேர்- டிஐஜி ரூபா

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

கோவை: மன்னார்குடி மாஃபியா சும்மா விட மாட்டார்கள் என சிலர் என்னை எச்சரித்தனர். எனினும் எனக்கு அது குறித்து கவலையில்லை என்று ஐபிஎஸ் அதிகாரி ரூபா தெரிவித்தார்.

சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் உள்ளார் சசிகலா. சிறைத் துறை டிஐஜியாக இருந்தவர் ரூபா. இவர் ஒரு நாள் சிறையில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது சசிகலா சிறையில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதாக குற்றம்சாட்டினார்.

ஷாப்பிங்

ஷாப்பிங்

மேலும் தான் சொகுசாக வாழ டிஜிபி சத்தியநாராயணாவுக்கு சசிகலா தரப்பு லஞ்சமாக ரூ.2 கோடி கொடுத்ததாகவும் ரூபா குற்றம்சாட்டினார். மேலும் சசிகலாவும், இளவரசியும் சிறையில் இருந்து வெளியே வந்து ஷாப்பிங் சென்ற காட்சிகள் வெளியாகின.

நிகழ்ச்சி

நிகழ்ச்சி

இதையடுத்து ரூபா பணியிடமாற்றம் செய்யப்பட்டார். பெரும் பரபரப்பை இந்த விவகாரம் ஏற்படுத்தியது. இந்நிலையில் கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஊழல் எதிர்ப்பு இயக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

மிரட்டல் இல்லை

மிரட்டல் இல்லை

அதில் அவர் கலந்து கொண்டு நேர்மையான அதிகாரிகளுக்கு விருது வழங்கி கௌரவித்தார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில் பரப்பன அக்ரஹாரா சிறை விவகாரம் தொடர்பாக எனக்கு நேரடியாக எந்த மிரட்டலும் இல்லை.

சிறையில்

சிறையில்

சசிகலா குறித்த உண்மைகளை நான் வெளியே கொண்டு வர நினைத்தபோது மன்னார்குடி மாஃபியா சும்மா விடமாட்டார்கள் என சிலர் எச்சரித்தனர். ஆனால் அதைப்பற்றி கவலைப்படாமல் பரப்பன அக்ரஹாரா சிறையில் நடந்ததை வெளிப்படுத்தினேன். ஊழல் செய்யும் அரசியல்வாதிகளை கேள்வி கேளுங்கள் என்றார்.

English summary
Roopa who participated in a function at Coimbatore says that she never mind about Sasikala's family while revealing truth how she lives luxury life in prison.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X