For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அதிமுக பிரமுகர் ஆதரவாளர்களின் கொலை வெறி.. ரவுடியை கொடூரமாக கொன்றதால் பரபரப்பு

Google Oneindia Tamil News

வேலூர்: வேலூரில் நடந்த கிருஷ்ண ஜெயந்தி விழாவில் அதிமுக பிரமுகரைத் தாக்கிய ரவுடி அடித்துக் கொலை செய்யப்பட்டதால் பதற்றம் நிலவுகிறது. அங்கு பாதுகாப்பிற்காக சுமார் 400 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

வேலூர் அதிமுக பிரமுகரும், மாநகராட்சி முன்னாள் கவுன்சிலருமான ஜி.ஜி.ரவியின் தம்பி ஜி.ஜி.ரமேஷ். இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வெட்டி கொல்லப்பட்டார். இக்கொலை தொடர்பாக, வேலூர் சத்துவாச்சேரியை சேர்ந்த பிரபல ரவுடி மகா என்ற மகாலிங்கம் கைது செய்யப்பட்டார்.

Rowdy murdered in Vellore

கைது செய்யப்பட்ட ரவுடி மகா மீது பல்வேறு கொலை மற்றும் வழிப்பறி வழக்குகளும் இருந்ததால், வேலூர் மற்றும் கடலூர் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்தார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த மகா தலைமறைவானார். மேலும் ஜி.ஜி.ரமேஷ் கொலையால் மகாவுக்கும், ஜி.ஜி.ரமேஷுக்குமான பகை மேலும் அதிகரித்தது, ரமேஷைப் போலவே ரவியையும் கொலை செய்ய மகா திட்டமிட்டு வந்தார்.

இந்நிலையில், வேலூர் காகிதப்பட்டறை பகுதியில் நேற்றிரவு கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றது. இதில் ஜி.ஜி.ரவி கலந்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த மகா, இந்த விழாவில் ரவியைக் கொல்ல திட்டமிட்டார்.

Rowdy murdered in Vellore

இதையடுத்து தனது கூட்டாளி குப்பன் மற்றும் மேலும் 2 பேருடன் காவி உடையில் விழா நடைபெற்ற இடத்திற்கு சென்றுள்ளார் மகா. அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை ஆடைகளுக்குள் மறைத்து வைத்து பக்தர்கள் போல கூட்டத்திற்குள் நின்றபடியே ரவியைக் கண்காணித்துள்ளனர்.

கிருஷ்ண ஜெயந்தி விழா முடிந்து தோட்டப்பாளையத்தில் உள்ள தாரகேஸ்வரர் கோவிலுக்கு ஜி.ஜி.ரவி மற்றும் அவரது ஆட்கள் இரவு 8.40 மணியளவில் வந்தனர். அவரை பின்தொடர்ந்து வந்த மகா, தாரகேஸ்வரர் கோவில் தெருவில் ஜி.ஜி.ரவி தனியாக நடந்து சென்ற போது அவரை சரமாரியாக கத்தியால் குத்தினார். இதில் கழுத்து, முகத்தில் ரவிக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஜி.ஜி.ரவியின் ஆட்கள் சுமார் 30 பேர் மகாவை துரத்திக் கொண்டு ஓடினர். காட்பாடி சாலையில் பேருந்து ஒன்று குறுக்கே வந்ததால், ரவியின் ஆட்களிடம் சிக்கினார் மகா.

Rowdy murdered in Vellore

மகாவை சுற்றி வளைத்த கும்பல் கம்பு, இரும்பு கம்பியால் மகாவின் கை, கால்களில் அடித்துள்ளனர். ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த மகாவின் தலையில் பெரிய கல்லை தூக்கி போட்டுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே ரவுடி மகா துடிதுடித்து உயிரிழந்தார். பின்னர் அக்கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது.

தகவல் அறிந்து விரைந்து வந்த வேலூர் சரக டி.ஐ.ஜி. தமிழ்ச்சந்திரன், போலீஸ் சூப்பிரண்டு செந்தில் குமாரி மற்றும் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினார்கள். மகாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே காயம் அடைந்த ஜி.ஜி.ரவி சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பினார்.

இந்த சம்பவங்களால் வேலூரில் பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது. காட்பாடி சாலை, காந்திரோடு, மெயின் பஜார், ஆற்காடு சாலை, தனியார் மருத்துவமனை, பழைய பஸ் நிலையம் உள்ளிட்ட இடங்களில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. அந்த பகுதியில் 400-க்கும் மேற்பட்ட அதிரடி படை போலீசார் குவிக்கப்பட்டனர்.

அதிமுக பிரமுகரின் ஆட்களால் ரவுடி கொடூரமாக நடு ரோட்டில் வைத்துக் கொலை செய்யப்பட்டது வேலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரவியின் மகன்கள், தம்பி கைது:

இந்தக் கொலை வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி வரும் போலீசார், ஜி.ஜி.ரவியின் மகன்கள் தமிழ்மணி,கோகுல், ரவியின் தம்பி செல்வம், அவரது மகன்கள் ரஞ்சித், கார்த்தி, சஞ்சீவ் மற்றும் உறவினர் சிலம்பரசன் ஆகியோரைக் கைது செய்துள்ளனர்.

படங்கள்: வாட்ஸ்ஆப்

English summary
In Vellore the famous rowdy Mahalingam was murdered by ADMK functionary G.G.Ravi's supporters, when he tried to kill him.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X