• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொடுங்கையூர் ரவுடி முட்டை கோபி வெட்டிக்கொலை- 6 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்

By Mayura Akhilan
|

சென்னை: கொடுங்கையூரில் டீ கடையில் நின்று கொண்டிருந்த பிரபல ரவுடி முட்டை கோபியை 6 பேர் கொண்ட கும்பல் வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காமராஜர் சாலை ஜம்புலி தெரு பகுதியை சேர்ந்தவர் முட்டை கோபி. சிறுவனாக இருந்தபோது எப்போதும் முட்டை தின்றுகொண்டே இருந்ததால் முட்டை கோபி என்ற அடைமொழி இவருக்கு ஏற்பட்டது.

பெரம்பூர் தொகுதி பா.ம.க. துணைச் செயலாளராக இருந்த இவர் மீது கொடுங்கையூர் காவல் நிலையத்தில் கொள்ளை மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன.

11 முறை குண்டர் சட்டம்

11 முறை குண்டர் சட்டம்

முட்டை கோபி கொடுங்கையூர் பகுதியில் கொலை, கொள்ளை, கொலைமுயற்சி, மாமூல் வசூல் என்று பயங்கரமாக கலக்கி வந்தார். 11 முறை குண்டர் சட்டத்தில் சிறை சென்றுள்ளார். இவர் மீது 40க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. சரவணன் என்கிற பாஷாவை கொலை செய்த வழக்கு இவர் மீது உள்ளது. தன்னைப் பற்றி போலீசுக்கு தகவல் கொடுத்த வந்ததால் அவரை கோபி கொன்றதாகக் கூறப்படுகிறது.

போலீஸ் கமிஷனருக்கு கடிதம்

போலீஸ் கமிஷனருக்கு கடிதம்

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறை சென்ற முட்டை கோபி வெளியே வந்தார். கடந்த ஜனவரி மாதம், தான் திருந்தி வாழ ஆசைப்படுவதாகவும், அதற்கு ஒரு சந்தர்ப்பம் அளிக்க வேண்டும் எனவும் காவல்துறை ஆணையருக்கு கடிதம் எழுதினார். அதில் கடந்த 10 ஆண்டுகளாக நான் சிறை பறவையாகத்தான் வாழ்ந்து வருகிறேன். என் மீது 40 வழக்குகள் உள்ளன.

நீதிமன்றம் விடுதலை

நீதிமன்றம் விடுதலை

சமீபத்தில் ஒரு கொலை வழக்கில் கொடுங்கையூர் போலீசார் என்னை பொய்யாக சேர்த்து விட்டனர். என் மீதுள்ள வழக்குகளில், பாதி வழக்குகளுக்கு மேல் பொய்யான வழக்குகள் தான். பல முறை என்னை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்துள்ளனர். அதில் 5 முறை உயர்நீதிமன்றம் என்னை விடுதலை செய்துள்ளது. என் மீதுள்ள பெரும்பாலான வழக்குகளில் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை.

சந்தர்ப்பம் கொடுங்க

சந்தர்ப்பம் கொடுங்க

சில நேரங்களில் போலீசார் என்னை ஊரை காலி செய்யுமாறு உத்தரவிடுகிறார்கள். நான் பிறந்த மண்ணில் கூட என்னை வாழவிடாமல் தடுக்கிறார்கள். நான் திருந்தி வாழ்வதற்கு ஒரு வாய்ப்பு தரும்படி வேண்டுகிறேன். என் மீது பொய்யான வழக்கு போடக்கூடாது என்று கொடுங்கையூர் மற்றும் மாதவரம் பால்பண்ணை போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்.

மர்ம நபர்கள் வெறிச்செயல்

மர்ம நபர்கள் வெறிச்செயல்

போலீசார் கொடுக்கும் தொல்லையால் எனது பெற்றோர் மற்றும் மனைவி துயரப்படும் நிலை உள்ளது. அதனால், எனக்கு திருந்தி வாழ ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்று கடிதம் எழுதியிருந்தார் கோபி. இந்நிலையில் இன்று காலை இவர் வீட்டுக்கு பக்கத்தில் உள்ள டீ கடையில் நின்று கொண்டிருந்த போது அங்கு வந்த 6 மர்ம நபர்கள் முட்டை கோபியை சரமாரியாக வெட்டிவிட்டுத் தப்பியோடினர்.

திருந்தி வாழ முடியலையே

திருந்தி வாழ முடியலையே

முட்டை கோபி கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கொலையாளிகளை தேடி வருகின்றனர். முட்டை கோபிக்கு இரண்டு மனைவிகளும் இரண்டு மகன்களும் உள்ளனர். கத்தி எடுத்தவனுக்கு கத்தியால் சாவு என்பது போல திருந்தி வாழ ஆசைப்பட்டும் விதி விடாமல் விரட்டி முட்டை கோபியை காவு வாங்கி விட்டது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

சென்னை சென்ட்ரல் தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே!
Po.no Candidate's Name Votes Party
1 Dayanidhi Maran 448911 DMK
2 Sam Paul. S.r. 147391 PMK

 
 
 
English summary
An unidentified gang murdered rowdy Muttai Gopi at Kodungaiyur, Chennai. Muttai Gopi, a resident of Kodungaiyur, was booked in more than 40 criminal cases and detained under the Goondas Act 11 times. He is involved in three murder cases.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more