For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அடேங்கப்பா.. புல்லட் நாகராஜனிடமிருந்து ரூ. 1 கோடி கள்ள நோட்டு சிக்கியுள்ளதாம்!

Google Oneindia Tamil News

Recommended Video

    பெண் போலீசுக்கு மிரட்டல் விடுத்த ரவுடி நாகராஜன் கைது- வீடியோ

    பெரியகுளம்: கைது செய்யப்பட்ட புல்லட் நாகராஜனிடமிருந்து ரூ. 1 கோடி கள்ள நோட்டுக்கள் சிக்கியதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பெரியகுளம் அருகே உள்ள மேல்மங்கலம் கிராமத்தைச் சேர்ந்த புல்லட் நாகராஜன் கடந்த சில நாட்களாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்தார். இன்று காலை அவரை பெரியகுளத்தில் வைத்து கைது செய்தது போலீஸ்.

    சின்ன சேஸிங்குக்குப் பிறகு நாகராஜன் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அவரை தென்கரை காவல் நிலையத்திற்கு போலீஸார் கொண்டு சென்றனர்.

    வீட்டில் அதிரடி ரெய்டு

    வீட்டில் அதிரடி ரெய்டு

    இதையடுத்து புல்லட் நாகராஜனின் வீட்டில் போலீஸார் சோதனை நடத்தினர். அந்த சோதனையில் பல சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. ரூ. 1 கோடிக்கு கள்ள நோட்டுக்கள் சோதனையின்போது கிடைத்ததாம்

    பொம்மைத் துப்பாக்கி

    பொம்மைத் துப்பாக்கி

    இதுதவிர பொம்மைத் துப்பாக்கிகள், 2 கத்திகள், போலி நீதிபதி ரப்பர் ஸ்டாம்புகள், வக்கீல் கவுன் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளது காவல்துறை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

    பொம்மைத் துப்பாக்கியால் மிரட்டல்

    பொம்மைத் துப்பாக்கியால் மிரட்டல்

    போலீஸார் இன்று தன்னைக் கைது செய்ய வந்தபோது துப்பாக்கியைக் காட்டியுள்ளார் நாகராஜன். ஆனால் அது பொம்மைத் துப்பாக்கி என்று பின்னர் தெரிய வந்தது.

    விசாரணைக்குப் பின் கோர்ட்

    விசாரணைக்குப் பின் கோர்ட்

    கைது செய்யப்பட்ட புல்லட் நாகராஜனிடம் தீவிர விசாரணை நடத்த திட்டமிட்டுள்ள போலீஸ் தரப்பு அவரை எப்போது கோர்ட்டில் ஆஜர் செய்யும் என்று தெரியவில்லை. இருப்பினும் அவரிடம் தீவிர விசாரணை நடத்திய பிறகே கோர்ட்டில் ஆஜர்படுத்துவார்கள் என்று தெரிகிறது.

    English summary
    Police sources say that the team has seized Rs 1 cr worth counterfeit currencies from "Bullet" Nagarajan. He was arrested in the morning.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X