For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ராம மோகன் ராவ் வீட்டில் ரூ. 24 லட்சம் ரொக்கம் பறிமுதல் - வருமான வரித்துறை

ராம மோகன் ராவின் மகன் வீடு அவரது நண்பர்களின் வீடுகள், ராம மோகன ராவ் உறவினர்கள் வீட்டிலும் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டது. இந்தச் சோதனையில் இருந்து ரூ.24 லட்சம் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: ராம மோகன ராவ் வீடு, அலுவலகம் உட்பட பல இடங்களில் நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்ட பொருட்கள் குறித்த விவரத்தை வருமான வரித்துறை அறிவித்துள்ளது.

தமிழக தலைமைச் செயலாளராக இருந்த ராம் மோகன ராவ் வீடு, அலுவலகம் உட்பட பல இடங்களில் நேற்று வருமான வரித்துறையினர் சுமார் 25 மணிநேரம் சோதனை நடத்தினர்.

Rs.24 lakhs money seize from Rama mohan rao hosue

ராம மோகன் ராவின் மகன் வீடு அவரது நண்பர்களின் வீடுகள், ராம மோகன ராவ் உறவினர்கள் வீட்டிலும் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டது. இந்தச் சோதனையில் கைப்பற்றப்பட்டுள்ள பொருட்கள் மற்றும் பணம் குறித்த விவரத்தை வருமான வரித்துறை வெளியிட்டுள்ளது.

ராம மோகன் ராவ் மற்றும் அவரது உறவினர் வீடுகளில் இருந்து ரூ.24 லட்சம் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில், ரூ.18 லட்சம் பழைய ரூபாய் நோட்டுகள். மீதமுள்ள ரூ.6 லட்சம் புதிய ரூபாய் நோட்டுகள். இவை தவிர, தங்க நகைகள், பரிசுப் பொருட்கள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என்று வருமான வரித்துறை தகவல் அளித்துள்ளது.

கைப்பற்றப்பட்ட நகைகள் மற்றும் பிற பொருட்களின் மதிப்பு இதுவரை கணிக்கப்படவில்லை என்றும் உரிய மதிப்பீட்டாளர்களைக் கொண்டு அவற்றின் மதிப்பு கணிக்கப்பட்டு அறிவிக்கப்படும் என்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ராம மோகன் ராவின் மகன் விவேக் கடந்த 2011ம் ஆண்டு வெளிநாட்டில் இருந்து சென்னைக்கு வந்தார் என்றும், அதன்பின்னர் 7 நிறுவனங்கள் தொடங்கினார் என்றும் கூறப்படுகிறது. அந்த நிறுவனங்களில் பல கோடி ரூபாய் கறுப்பு பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும் வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

English summary
IT Tax officials said Rs 24 lakh in new Rs 2,000 notes,18 lakhs gold and documents with details of undisclosed assets worth about Rs 5 crore were recovered during the raids carried out at 11 places.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X