For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஸ்டாலின், மா. சுப்பிரமணியன் மேயராக இருந்தபோது ரூ.417 கோடி ஊழல்: சைதை துரைசாமி குற்றச்சாட்டு

By Siva
Google Oneindia Tamil News

Rs. 417 crore scam in MK Stalin, M. Subramanian's tenure: Chennai Mayor
சென்னை: மு.க. ஸ்டாலின், மா. சுப்பிரமணியன் சென்னை மேயராக இருந்தபோது ரூ. 417 கோடிக்கு முறைகேடு நடந்துள்ளதாக தற்போதைய மேயர் சைதை துரைசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மேயர் சைதை துரைசாமி தலைமை தாங்கினர். கேள்வி நேரம் முடிந்த பிறகு அவர் அறிக்கை ஒன்றை வாசித்தார்.

அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,

சாலைகள் அமைத்ததில் முன்னாள் மேயர்களான ஸ்டாலின், மா.சுப்பிரமணியன் இருந்த காலத்தில் ரூ.417 கோடிக்கு முறைகேடு நடந்து இருப்பதாக தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இது பற்றி விசாரிக்கப்பட்டு வருகிறது.

அதற்கு ஒரு உதாரணத்தை சொல்கிறேன், சைதாப்பேட்டையில், கெங்கை அம்மன் கோவில் தெருவில் சாலை போடாமலே போட்டதாக தவறான கணக்கு எழுதி இருக்கிறார்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

துரைசாமியின் குற்றச்சாட்டிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த திமுக உறுப்பினர்கள் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

English summary
Chennai Mayor Saidai Duraisamy told that Rs. 417 crore was mishandled when MK Stalin and M. Subramanian were mayors.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X