For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விவசாயிகள் கடன் சுமை குறைய.. பயிர் காப்பிட்டிற்காக ரூ.487 கோடி ஒதுக்கீடு… தமிழக அரசு அறிவிப்பு

வறட்சி, இயற்கை சீற்றங்களால் விவசாயிகளுக்கு ஏற்படும் கடன் சுமையை குறைக்க ரூ. 487 கோடி பயிர் காப்பீட்டிற்காக தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: விவசாயிகளின் கடன் சுமையைக் குறைக்க ரூ. 487 கோடி நிதி ஒதுக்கியுள்ளது தமிழக அரசு. இதற்கான அரசாணை இன்று வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை நீங்கலாக அனைத்து மாவட்டத்திற்கும் வறட்சி நிதியாக ரூ. 487 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் பயிர்க்காப்பீடு திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்து விவசாயத்துறை அரசாணை வெளியிட்டு உள்ளது.

Rs.487 crores allocated for crop insurance

வறட்சி உள்ளிட்ட இயற்கை சீற்றங்களால் விவசாயிகளுக்கு ஏற்படும் சுமையை குறைக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. தேசிய, தனியார் வங்கிகளில் கட்டாயம் பயிர் காப்பீடு செய்ய வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

2016-17 ஆம் ஆண்டு 25 லட்சம் பேர் பயன்பெற தமிழக விவசாயத்துறை இலக்கு நிர்ணயித்துள்ளது. நெல், வாழை உள்ளிட்ட 21 பயிர்களுக்கு விவசாயிகள் காப்பீடு செய்யலாம் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

English summary
Rs.487 crores allocated for crop insurance Rs. 487 crore was allocated by Tamil Nadu government for crop insurance today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X