For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்தால் குழந்தைகளுக்கு ஆபத்தா?

By Siva
Google Oneindia Tamil News

Recommended Video

    மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்தில் செத்து மடிந்த புறாக்கள்

    காஞ்சிபுரம்: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படும் என்ற வதந்தி பரவிக் கொண்டிருக்கிறது.

    உலகப் புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் கடந்த 2ம் தேதி இரவு தீ விபத்து ஏற்பட்டது. இதில் கிழக்கு கோபுர வளாகத்தில் இருந்த 35க்கு மேற்பட்ட கடைகளுக்கு தீ பரவியது.

    Rumour spreads like wildfire in Kancheepuram

    இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 3 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சம்பவத்தால் குழந்தைகளுக்கு ஆபத்து என்று காஞ்சிபுரத்தில் வதந்தி பரவியுள்ளது. பெண் குழந்தைகள் அம்மன் கோவிலுக்கு வளையல் போட வேண்டும் என்றும், ஆண் குழந்தைகள் இருந்தால் எண்ணிக்கைக்கு ஏற்ப வீட்டு வாசலில் விளக்கு வைக்க வேண்டும் என்று யாரோ கிளப்பிவிட அது தீயாக பரவிக் கொண்டிருக்கிறது.

    இந்த வதந்தியை நம்பி மக்கள் வீட்டு வாசலில் விளக்கு வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    A rumour saying that it is not good time for children as fire accident happened in world famous Madurai Meenakshi Amman temple, spreads like wildfire in Kancheepuram.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X