தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழக துணைவேந்தராக எஸ்.பெலிக்ஸ் நியமனம்: முதல்வரை நேரில் சந்தித்து வாழ்த்து

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு மீனவளப் பல்கலைக்கழக துணைவேந்தராக எஸ். பெலிக்ஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர் இன்று முதல்வரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகம் நாகப்பட்டினத்தில் 2012ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்தப் பல்கலைக்கழகத்தில், மீன் வளர்ப்பு, மீன்வள உயிரியல், மீன் பிடித்தல், மீன் உயிர்தொழில்நுட்பம், மீன்வள பொருளாதாரம், மீன்கள் வாழும் சூழ்நிலையியல், மீன்வள விரிவாக்கம், மீன்வள தொழில்நுட்பம், மீன்வள பொறியியல் மற்றும் மீன்கள் பதப்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு படிப்புகள் கற்றுத் தரப்படுகின்றன.

S. Felix appointed as a VC of TNFU

இந்தப் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் இல்லாமல் இருந்த நிலையில், பொறுப்பு துணைவேந்தராக பதிவாளர் கு ரத்னகுமாரே செயல்பட்டு வந்தார்.

இந்நிலையில் இன்று எஸ். பெலிக்ஸ், பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக நியமனம் செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து, தலைமை செயலகத்திற்கு சென்ற பெலிக்ஸ் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
S. Felix was appointed as a Vice Chancellor on Tamil Nadu Fisheries University.
Please Wait while comments are loading...