For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

Impotent என்றால் திறனற்றவர்கள் என்றுதான் அர்த்தம்- குருமூர்த்தி விளக்கம்

Impotent என்றால் திறனற்றவர்கள் என்றுதான் அர்த்தம் என்று ஆடிட்டர் குருமூர்த்தி விளக்கம் அளித்துள்ளார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    குருமூர்த்திக்குதான் ஆண்மையில்லை- ஜெயக்குமார்- வீடியோ

    சென்னை: Impotent என்று தான் கூறியது அரசியல் ரீதியாகதான் என்றும் மற்றவர்கள் தவறாக எடுத்து கொண்டால் அதற்கு தான் பொறுப்பல்ல என்றும் குருமூர்த்தி விளக்கமளித்துள்ளார்.

    தினகரனின் ஆதரவாளர்களை 6 மாதத்துக்குப் பிறகு நீக்கியது குறித்து துக்ளக் ஆசிரியரும் ஆடிட்டருமான குருமூர்த்தி டிவிட்டரில் கருத்து தெரிவித்திருந்தார். அதில் முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆண்மையற்றவர்கள் என அவர் பதிவிட்டிருந்தார்.

    S. Gurumurthy says that Impotent means incapability

    இதற்கு முதல்வர் மற்றும் துணை முதல்வர் என்ற பதவிக்கு மரியாதை அளிக்க வேண்டும் என்று கட்சி பேதமின்றி பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

    இதற்கு பதிலளித்த ஜெயக்குமார், ஆண்மையில்லாதவர்கள்தான் ஆண்மை குறித்து பேசுவார்கள் என்று தெரிவித்தார். பொறுப்புணர்ந்து பேச வேண்டும், நான்காம் தர வார்த்தைகளை பயன்படுத்தக் கூடாது என்று ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்தார்.

    இந்நிலையில் இதற்கு குருமூர்த்தி பதிலளிக்கையில் எழுத்தாளராக கட்சிகள் குறித்து எனது கருத்துக்களை, அவர்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் தொடர்ந்து சொல்வேன் என்றும் குருமூர்த்தி தனது டிவிட்டில் தெரிவித்திருந்தார்.

    இப்படியே இவர்களின் முற்றல் மோதல்கள் அதிகரித்து வந்த நிலையில் இம்போடன்ட் என்ற வார்த்தைக்கு குருமூர்த்தி விளக்கம் அளித்துள்ளார். அது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில் நான் impotent என்று கூறியது அரசியல் ரீதியாகத்தான்.

    மற்ற படி அவர்கள் எப்படி என்பது பற்றி எனக்கு அவசியம் இல்லை. Impotent என்றால் திறனற்றவர்கள் என்றுதான் அர்த்தம் உண்டு.

    வேறு அர்த்தம் அவர்கள் மனதில் வந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல. அரசியல் ரீதியாக அவர்கள் impotent தான். நான் நான் பேசியதன் அர்த்தம் புரியாமல் என்னை அவதூறாக அமைச்சர் பேசிய தெருப் பேச்சுக்கு நான் பதில் தெருப்பெச்சில் நான் ஈடுபட்டால் தான் நான் அவர் கூறிய பட்டதுக்கு ஏற்றவனாவேன் என்று அழுத்தம் திருத்தமாக கூறியுள்ளார்.

    English summary
    Auditor Gurumurthy says that impotent means incapability, he has not responsible for what the ADMK ministers thinking.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X