For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பன்னிவாயன் என்று கிராபிக்ஸில் கிண்டலடிப்பது நியாயமா... எஸ்.வி.சேகர் வேதனை

Google Oneindia Tamil News

சென்னை: இந்து மகாசபை கட்சிக்காரர்கள் தன்னை கிராபிக்ஸில் பன்னிவாயன், அது இது என்று மட்டகரமாக கிண்டலடித்தது நியாயமா என்று கேட்டுள்ளார் நடிகரும், சமீபத்தில் பாஜகவில் இணைந்தவருமான எஸ்.வி.சேகர்.

இதுதொடர்பாக அவர் விகடன் டைம்பாஸுக்கு அளித்துள்ள பேட்டியில் விரிவாகப் பேசியுள்ளார்.

மேலும் தனது பேட்டியில், பதவிக்காக பாஜகவில் இணையவில்லை என்றும் விளக்கியுள்ளார் எஸ்.வி.சேகர்.

பேட்டியிலிருந்து சில பகுதிகள்...

தவறான புரிதல்

தவறான புரிதல்

பலர் என்னைப்பத்தி தப்பான புரிதலோட பேசுறாங்க. முதலில் அதிமுகவில் இருந்தேன். அப்புறம் காங்கிரஸ்ல இருந்தேன். இப்போ பாஜகவுக்கு வந்திருக்கேன். ஆனா எப்பவும் சோஷியல் சர்வீஸ் பண்ணிட்டு இருக்கும் ஆளு நான்.

91 முதல் பாஜக அனுதாபி

91 முதல் பாஜக அனுதாபி

1991-ம் ஆண்டிலிருந்து 2006 வரைக்கும் பாஜக உறுப்பினரா இல்லாட்டியும் அனுதாபியா இருந்தவன்தான். 2004-ல நடிகன்கிற என் பாப்புலாரிட்டியைப் பயன்படுத்தி பாஜகவுக்குப் பிரசாரம் செஞ்சவன்தான் நான்.

அதிமுகவுக்குப் போனது காலத்தின் கட்டாயம்

அதிமுகவுக்குப் போனது காலத்தின் கட்டாயம்

காலத்தின் கட்டாயம் என்னை அதிமுக பக்கம் போகவெச்சது. ஆனாலும் நான் எப்பவும் தேசிய அரசியல்ல ஆர்வம் உள்ளவன் சார். எனக்கு சமூகப் பணிக்கு ஒரு வழி தேவைப்பட்டது. அதற்குத்தான் மாநிலக் கட்சியான அதிமுகவில் சேர்ந்தேன்.

கலைஞர் மீது மரியாதை உண்டு

கலைஞர் மீது மரியாதை உண்டு

கலைத் துறையைச் சேர்ந்தவர், வயதில் மூத்தவர், தமிழ் அறிஞர் என்ற மரியாதை கலைஞர் மேல உண்டு. ஆனால் திராவிடக் கட்சிகளில் பிராமண எதிர்ப்பு உள்ள திமுக மேல எந்தக் காலத்திலயும் உடன்பாடு கிடையாது.

காங்கிரஸில் சேர்ந்ததுதான் பெரிய தப்பு

காங்கிரஸில் சேர்ந்ததுதான் பெரிய தப்பு

நான் பண்ணின தப்புகளிலேயே பெரிய தப்புன்னா, காங்கிரஸ்ல போய்ச் சேர்ந்ததுதான். அதிலும் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி இருக்குன்னு நம்பினது பெரிய தப்பு. அதுதான் அரசியல் புரிதல் இல்லாதவங்ககூட என்னைக் கிண்டல் பண்ற நிலைமைக்குக் கொண்டு வந்திருச்சு.

வாழ்க்கை ஒரு வட்டம்

வாழ்க்கை ஒரு வட்டம்

வாழ்க்கை வட்டம்கிற மாதிரி நான் வரவேண்டிய இடத் துக்கு வந்துட்டேன். அதுக்குப் பின்னாடி மோடிங்கிற பெரிய தலைவரோட ஃப்ரெண்ட்ஷிப்பும் ஒரு காரணம்தான்.

மோடி என்னோட நண்பர்

மோடி என்னோட நண்பர்

நரேந்திர மோடியிடம், ஒரு மாநிலத்தோட முதல்வர் என்கிற பந்தா எப்பவும் இருந்தது இல்லை. 2011 -ல ஒரு சம்பவம்... அவரோட பிறந்தநாள் செப்டம்பர் 17-ம் தேதி. அவர் ஆபீஸுக்கு போன் பண்ணினா 'மீட்டிங்ல இருக்கார்'னு சொன்னாங்க. மீட்டிங் முடிஞ்சதும், 'சேகர்ஜி... மோடி ஹியர்!'னு கால் பண்ணிப் பேசுறார். ஆடிப் போய்ட்டேன்.

சொந்தக்காரப் பையன் கல்யாணம்

சொந்தக்காரப் பையன் கல்யாணம்

அதேபோல இந்த வருஷம் என் சொந்தக்காரப் பையனோட கல்யாணம் குஜராத்துல நடந்துச்சு. நான் சந்திக்க வர்றேன்னு சொல்லி அப்பாய்ன்மென்ட் கேட்டிருந்தேன். சாயங்காலம் 4.30.க்கு எனக்கு அப்பாயிண்மென்ட் கொடுத்திருந்தார். ஆனால் இங்கே ஃப்ளைட் டேக்-ஆஃப் ஆனதே 3 மணிக்கு. மெசேஜ் பண்ணி ஸாரி கேட்டு நாளைக்கு அல்லது நாளை மறுநாள் உங்களைச் சந்திக்க முடியுமா, நான் ரெண்டு நாள் குஜராத்ல இருப்பேன்னு மெயில் அனுப்பினேன். உடனே அடுத்த நாளே மதியம் 12 மணிக்கு டைம் ஒதுக்கி, ரிசீவ் செஞ்சு பேசினார்.

சான்ஸே இல்லை சார்...

சான்ஸே இல்லை சார்...

சான்ஸே இல்லை சார். இப்போ கட்சியில சேர்ந்துட்டேன்கிற தகவலைச் சொன்னதும் வாழ்த்தினதோட ஒரு கடிதமும் எழுதி இருந்தார். எப்போ போன் பண்ணினாலும் அதே பாசத்தோட 'சேகர்ஜி'தான்! அவர் பிரதமர் ஆனா நிச்சயமா நல்ல விஷயங்கள் பண்ணுவார் சார். அதுக்கு ஒரு அணிலா இருந்து உதவி செய்வேன்.''

பணம் சம்பாதிக்க வரவில்லை

பணம் சம்பாதிக்க வரவில்லை

நான் பணம் சம்பாதிக்க அரசியலுக்கு வரலை. எங்கிட்ட எல்லாமே இருக்கு. இப்பவும் நான் கட்சியில பதவியோ எம்.பி. சீட்டோ டார்கெட் பண்ணி காய் நகர்த்தலை. நாட்டுக்கு நல்லது பண்ற ஒரு விஷயத்தை யார் பண்ணாலும் நான் அங்கே இருப்பேன்.

இந்து மகாசபையின் கிண்டல்

இந்து மகாசபையின் கிண்டல்

நீங்க இந்துத்துவத்தை ஆதரிச்சுப் பேசறீங்க. அதே இந்துத்துவத்தை ஆதரிக்கிற இந்து மகாசபாங்கிற அமைப்பு உங்களைக் கேவலமாச் சித்தரிச்சு போஸ்டர் ஒட்டி இருந்தாங்களே என்ற கேள்விக்கு எஸ்.வி.சேகர் பதிலளிக்கையில், பன்னிவாயன் அது இதுனு கண்றாவியா மட்டகரமா கிராஃபிக்ஸ் பண்ணி இருந்தாங்க. 'மகாபாரதத்தில் மங்காத்தா' நாடகத்தை ஆயிரம் தடவைக்கு மேல போட்டிருக்கேன்.

லைக் கொடுத்து ஷேர் செய்த மங்காத்தா

லைக் கொடுத்து ஷேர் செய்த மங்காத்தா

உலகம் பூரா இன்டெர்நெட்ல பத்து லட்சம் பேருக்கு மேல பார்த்து லைக் கொடுத்து ஷேரிங் ஆகுற நாடகம் அது. இன்னும் சி.டி.யாவும் பரபரப்பா வித்துட்டு இருக்கு.

பார்த்தாலே பாவமா இருக்கு

பார்த்தாலே பாவமா இருக்கு

சும்மா லெட்டர்பேடோ அட்ரஸோ இல்லாத ஆளுங்க தங்களோட பாப்புலாரிட்டிக்காக யார் வம்புக்கும் போகாத என்னைப் பயன்படுத்தி இருக்காங்க. அவங்களைப் பார்த்தாப் பாவமா இருக்கு.

சொறிநாய் படத்தில் பன்னி காது...

சொறிநாய் படத்தில் பன்னி காது...

சொறிநாய் படத்தைப்போட்டு பன்னியோட காதை கிராஃபிக்ஸ் பண்ணி இருக்காங்க. எங்கிட்ட கேட்டா இதைவிட நல்லா கிராஃபிக்ஸ் பண்ண நானே ஸ்பான்ஸர் பண்ணி இருப்பேன் என்றார் எஸ்.வி.சேகர்.

English summary
Actor and BJP cadres S V Sekhar has slammed Hindu Mahasabha for its condemnation against him.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X