For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தூங்க போற நேரத்துல நிராகரிச்சா விஷால் திரும்ப வரமாட்டாருனு தைரியமா.. எஸ்.வி.சேகர் நய்யாண்டி

தூங்க போற நேரத்துல வேட்புமனுவை நிராகரித்தால் விஷால் திரும்ப வரமாட்டாருங்கிற தைரியமா என்று எஸ்.வி.சேகர் கேள்வி எழுப்பியுள்ளார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: விஷாலின் வேட்புமனு நிராகரிப்பு- போலி கையெழுத்துகள் கண்டுபிடிப்பு!!- வீடியோ

    சென்னை: முதலில் விஷாலின் வேட்புமனுவை ஏற்றுக் கொண்டுவிட்டு தூங்க போற நேரத்துக்கு தேர்தல் ஆணையம் அவரது வேட்புமனுவை நிராகரிப்பதை பார்த்தால் அவர் வெற்றி கொண்டாட்டத்திலிருந்து திரும்ப வரமாட்டாருங்கிற தைரியமா என்று எஸ்.வி.சேகர் கேள்வி எழுப்பியுள்ளார்.

    ஆர்.கே.நகருக்கு இடைத்தேர்தல் வரும் 21-ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த வாரம் தொடங்கியது. இதில் அதிமுக, திமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி, தீபா பேரவை ஆகியன வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.

    விஷாலும் சுயேட்சையாக போட்டியிடுவதாக அறிவித்தார். அதன் படி வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாளான திங்கள்கிழமை வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

     வேட்புமனுக்கள் நிராகரிப்பு

    வேட்புமனுக்கள் நிராகரிப்பு

    தேர்தல் ஆணையம் நேற்றைய தினம் வேட்புமனுக்களை பரிசீலனை செய்தன. அப்போது படிவம் 26-ஐ பூர்த்தி செய்யாத காரணத்தால் தீபாவின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. அதேபோல் விஷாலின் மனுவும் நிராகரிக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

     ஏற்பும், நிராகரிப்பும்

    ஏற்பும், நிராகரிப்பும்

    இதையடுத்து தண்டையார்பேட்டையில் உள்ள தேர்தல் ஆணையத்துக்கு வந்த விஷால் தனது வேட்புமனு நிராகரிக்கப்பட்டதற்கான காரணத்தை கேட்டார். அதற்கு முன்மொழிந்தவர்கள் 2 பேரின் கையெழுத்து தங்களுடையது அல்ல என்று பின்வாங்கியதால் நிராகரிக்கப்பட்டதாக அதிகாரிகள் அறிவித்தனர். இதையடுத்து விஷால் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தேர்தல் அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தைக்கு பின்னர் விஷாலின் வேட்புமனு ஏற்கப்பட்டது. பின்னர் இரவு 11.30 மணி அளவில் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக அறிவிப்பு வெளியானது.

    தேர்தல் கமிஷன் காமெடி

    இதுகுறித்து எஸ்.வி.சேகர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், தன் பங்குக்கு தேர்தல் கமிஷனின் காமெடி கலாட்டா. விஷால் தூங்கப்போனதுக்கப்புறம் சொன்னா success partyலேயிருது பாதீல வர முடியாதூங்கிற தைரியம் என்று கூறியுள்ளார்.

    வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள்

    இன்னொரு டுவீட்டில் எஸ்.வி.சேகர் கூறுகையில், என்ன நடக்கிறது என்பது தெரியவில்லை- விஷால். இதுதான் நிஜ அரசியலின் முதல் பாடம். இடைத்தேர்தலில் கட்சியில்லாத சுயேட்சை வெற்றி சினிமா பாட்டுல மட்டுமே சாத்தியம் என்பதை உணர ஒரு வாய்ப்பு. தன் நிர்வாகத்தில் உள்ள சினிமா அமைப்புக்களில் கொடுத்த வாக்குறுதைகளை நிறைவேற்றலாம் என்று தெரிவித்துள்ளார்.

    English summary
    S.Ve.Shekher says about Vishal;s nomination rejected that this is the first lesson of real politics. He has to do reforms in Cinema first.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X