For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சாப்பிட வாங்க: தினை அதிரசம், கொழுக்கட்டை! தமிழர் பாரம்பரிய உணவுக்கென புதுச்சேரியில் ஒரு உணவகம்

By Veera Kumar
Google Oneindia Tamil News

புதுச்சேரி: தமிழர்களுக்கு இப்போது தங்கள் பாரம்பரிய உணவு மீதான பார்வை திரும்ப துவங்கியுள்ளது. இது சார்ந்த உணவகங்கள் இப்போது பெருகியுள்ளன.

புதுச்சேரியிலும் இப்படியான ஒரு உணவகம் உள்ளது. அதன் பெயரே 'தமிழர் உணவகம்'. புத்திக்கூர்மையுடன் இலக்கியம் படைத்த தமிழன், உடல் வலிமையிலும் மாபெரும் பராக்கிரமசாலியாக இருந்தான். கங்கையை வென்றான், கடாரத்தையும் வென்றான். இதுபோன்ற உடல்வலிமைக்கு நமது பாரம்பரிய உணவுகளும் ஒரு காரணம்.

Saapida Vaanga: Tamilar Unavagam is famous for Tamil traditional foods in Puducherry

இப்படியான உணவுகள்தான் தமிழர் உணவகத்தில் விற்பனை செய்யப்படுகின்றன. இங்கு மூலிகை சூப் 15 ரூபாய்தான். நவதானிய சுண்டல், கிழங்கு உருண்டை, சிறுதானிய புட்டு உள்ளிட்டவை 15 ரூபாய்க்கும் கிடைக்கின்றன. 4 கொழுக்கட்டை 20 ரூபாய்தானாம்.

நமது வாசகர் பகிர்ந்த இந்த விலை பட்டியலை நீங்களும் பாருங்கள். புதுச்சேரி செல்வோர் மிஸ் பண்ணாம சாப்பிடுங்க.

வாசகர்களே உங்கள் பகுதியில் அல்லது உங்களுக்கு தெரிந்த உணவகங்களில் உங்கள் அனுபவத்தை புகைப்படத்தோடு எழுதியனுப்பலாமே. அனுப்ப வேண்டிய இ-மெயில் முகவரி: [email protected]

English summary
Tamilar Unavagam is famous for Tamil traditional foods in Puducherry. You can taste it and tell us.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X