For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நீட் தேர்வு நடத்த கூடாது.. மீண்டும் உண்ணாவிரத போராட்டத்தில் குதித்த சபரிமாலா ஜெயகாந்தன்

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று, ஆசிரியர் பணியில் இருந்து விலகிய சபரிமாலா ஜெயகாந்தன் மீண்டும் உண்ணாவிரதம் செய்ய தொடங்கி இருக்கிறார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    மீண்டும் உண்ணாவிரத போராட்டத்தில் குதித்த சபரிமாலா ஜெயகாந்தன்-வீடியோ

    கரூர்: நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று, ஆசிரியர் பணியில் இருந்து விலகிய சபரிமாலா ஜெயகாந்தன் மீண்டும் உண்ணாவிரதம் செய்ய தொடங்கி இருக்கிறார்.

    நீட் தேர்வு பிரச்சனை உச்சத்தில் இருந்த போது, சென்ற வருடம், தன்னுடைய ஆசிரியர் பணியை உதறிவிட்டு போராட்ட களத்தில் குதித்தார் சபரிமாலா ஜெயகாந்தன். பள்ளி ஆசிரியராக இருந்த அவர், அரசு பள்ளியிலேயே உண்ணாவிரதம் தொடங்கினார். ஆனால் அவரது போராட்டத்திற்கு பள்ளி நிர்வாகம் ஒத்துழைக்காததை அடுத்து அவர் பணியைவிட்டு விலகினார்.

    Sabarimala Jayakanthan starts her hunger strike once again against NEET

    பின் மகனுடன் சேர்ந்து உண்ணாவிரதம் இருந்தார். பின் உண்ணாவிரதத்தை கைவிட்ட அவர், நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் தொடரும், அனிதாவிற்கு நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என்று கூறினார்.

    இந்த நிலையில் இப்போது மீண்டும் போராட்ட களத்தில் இறங்கியுள்ளார். மீண்டும் நீட்டுக்கு எதிராக போராட தயாராகி இருக்கிறார்.

    தற்போது கரூரில் இருக்கும் அவர் வீட்டில் உண்ணாவிரதத்தை தொடங்கியுள்ளார். நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும் வரை போராட்டம் தொடரும் என்று அவர் கூறியுள்ளார்.

    English summary
    Sabarimala Jayakanthan starts her hunger strike once again against NEET in Karur.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X