For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழக- கேரளா எல்லையில் விபரீதம்- தீப்பிடித்து எரிந்த ஐய்யப்ப பக்தர்கள் கார்

Google Oneindia Tamil News

நெல்லை: தமிழகத்தில் இருந்து சபரிமலைக்கு சென்ற ஐய்யப்ப பக்தர்களின் கார் தீப்பிடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை பகுதியை சார்ந்த முகம்மது அபிலாஷ் என்பவரது வாடகைக்காரில் நெல்லையை சார்ந்த 4 ஐய்யப்ப பக்தர்கள் குற்றாலத்தில் குளித்துவிட்டு செங்கோட்டை வழியாக சபரிமலை நோக்கி சென்றுக்கொண்டிருந்தனர்.

Sabarimala pilgrims car get fired in TN border

அப்போது செங்கோட்டை 3 ஆவது பெட்ரோல் பம்ப் அருகே கார் சென்றுக் கொண்டிருந்தப் போது காரின் முன் பகுதியில் இருந்து தீடீர் என தீ பிடித்து எரியதொடங்கவே காரை அப்படியே நிறுத்திவிட்டு டிரைவர் உள்பட ஐய்யப்ப பக்தர்கள் காரைவிட்டு இறங்கி தப்பினர்.

உடனடியாக தீயணைப்பு வாகனம் வந்து தீயை அணைப்பதற்குள் காரில் பல பகுதிகள் எரிந்து நாசமாகியது.எஞ்சிய பகுதிகளில் தீயணைப்பு துறையினர் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்தனர்.கொஞ்சம் முன்னதாக சில அடிதூரம் பின்னோக்கி கார் வரும் போது தீ பிடித்திருந்தால் பெட்ரோல் பம்ப் க்கும் ஆபத்து உருவாக்கி பெரும் அசம்பாவிதம் நிகழ்ந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.ஓட்டுனரின் திறமையால் அசம்பாவிதம் தடுக்கப் பட்டது.

English summary
A car got fired in TN - Kerala border, Sabarimala pilgrims saved.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X