For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

என்னது ரஜினிக்கு ஆதரவா? சகாயம் ஐஏஎஸ்-ன் அதிரடி விளக்கம்!

ரஜினிகாந்த் அரசியல் பிரவேசத்திற்கு, ஐஏஎஸ் அதிகாரி சகாயம் ஆதரவு அளித்துள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. இதனை அவர் மறுத்துள்ளார்.

Google Oneindia Tamil News

நெல்லை: கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு ரசிகர்களை சந்தித்து நடிகர் ரஜினிகாந்த் புகைப்படம் எடுத்துக் கொண்டதே அரசியல் பரபரப்பாகிவிட்டது.

தமிழகத்தில் உள்ள 15 மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர்களை சந்தித்த அவர், கடைசி நாளில் உரையில், அரசியல் தலைவர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை என்றும் திறமையான தலைவர்கள் இருந்தும் பயனில்லை என்றும் ரஜினி பேசியது தமிழக அரசியலில் பரபரப்பை கிளப்பியது. மேலும், இந்தக் கருத்தை பல அரசியல் தலைவர்கள் ஆதரித்தும் எதிர்த்தும் பேசி வருகின்றனர்.

பாஜக

பாஜக

இந்நிலையில், தமிழகத்தில் பாஜக காலூன்றுவதற்கு ரஜினியை பயன்படுத்தப் பார்க்கிறது. ரஜினியை கட்சியில் இணைத்து அவரது பிரபலத்தை தமிழக அரசியலில் வைத்து வாக்குகளை அள்ளிவிடும் கனவில் பாஜக இருந்து வருகிறது.

சகாயம் ஐஏஎஸ் ஆதரவு

சகாயம் ஐஏஎஸ் ஆதரவு

இந்நிலையில், ரஜினியில் அரசியல் பிரவேசத்திற்கு ஐஏஎஸ் அதிகாரி சகாயம் ஆதரவு அளித்துள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. சகாயத்தின் ஆதரவு குறித்து சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் செய்தியால் அதிர்ந்து போயுள்ளார் சகாயம்.

அரசியலுக்கு அப்பால் சகாயம்

அரசியலுக்கு அப்பால் சகாயம்

நடிகர் ரஜினிகாந்த்திற்கு ஆதரவு என சமூக வலைதளங்களில் பரவி செய்திக்கு சகாயம் ஐஏஎஸ் நெல்லையில் முற்றுப்புள்ளி வைத்தார். நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்ச் சமூகத்தை உருவாக்குவதற்காக அரசியலுக்கு அப்பாற்பட்டு செயல்பட்டு வருவதாகக் கூறினார்.

ரஜினிக்கு இல்லை ஆதரவு

ரஜினிக்கு இல்லை ஆதரவு

மேலும், ரஜினிக்கு ஆதரவு என்ற தகவலில் எந்தவித உண்மை இல்லை என்று சகாயம் திட்டவட்டமாகத் தெரிவித்தார். அவரது இந்த விளக்கத்தின் மூலம் சமூக வலைதளங்களில் ‘ரஜினிக்கு ஆதரவு' என்று பரவிவரும் தகவலுக்கு சகாயம் முடிவு கட்டினார்.

English summary
Sagayam IAS refused to support Rajinikanth’s political entry in Thirunelveli.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X