For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எழுத்தாளர்கள் லட்சுமி சரவணகுமார், குழ.கதிரேசனுக்கு புரஸ்கார் விருது

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: சாகித்ய அகாதமி இளம் எழுத்தாளர்களுக்கு வழங்கும் தேசிய விருதான "புரஸ்கார் விருது" இந்த ஆண்டு தமிழில், எழுத்தாளர்கள் லட்சுமி சரவணகுமார் மற்றும் குழ.கதிரேசனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

எழுத்தாளர் லட்சுமி சரவணகுமார் இதுவரை மூன்று நாவல்களையும், முப்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் எழுதியிருக்கிறார். இவர் இயக்கிய ‘மயான காண்டம்' குறும்படம் சர்வதேச அளவில் கவனம் பெற்றிருக்கிறது.

Sahitya Akademi announcement to tamil writers

கானகன் நாவல் எழுதியதற்காக எழுத்தாளர் லட்சுமி சரவணகுமாருக்கு சாகித்ய அகாடமியின் யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட உள்ளது. இவர் இதுவரை மூன்று நாவல்களையும், முப்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் எழுதியிருக்கிறார்.

லட்சுமி சரவணக்குமார் இயக்கிய ‘மயான காண்டம்' குறும்படம் சர்வதேச அளவில் கவனம் பெற்றிருக்கிறது. மேலும் ‘அரவான்', ‘காவியத்தலைவன்' படங்களில் துணை இயக்குநராகவும் லட்சுமி சரவணகுமார் பணிபுரிந்திருக்கின்றார்.

இந்நிலையில், "கானகன்" நாவல் எழுதியதற்காக எழுத்தாளர் லட்சுமி சரவணகுமாருக்கு "யுவ புரஸ்கார்" விருதும், குழந்தைகள் இலக்கியத்தில் பங்களித்ததற்காக குழ. கதிரேசனுக்கு "பால் சாகித்ய புரஸ்கார்" விருதும் வழங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சாகித்ய அகாடமி சார்பில் 21 மொழிகளில் பால சாகித்ய புரஸ்கார் விருதும், 24 மொழிகளில் யுவ புரஸ்கார் விருதும் வழங்கப்படுகிறது.

English summary
Sahitya Akademi announcement to tamil writers lakshmi saravanakumar and kathiresan
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X