For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழில் சிறந்த நாவல் சூல்.. எழுத்தாளர் சோ. தர்மனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு

Google Oneindia Tamil News

சென்னை: இந்த ஆண்டுக்கான தமிழில் சிறந்த நாவலாக சூல் என்ற நாவல் சாகித்யா அகாடமியால் தேர்வு செய்யப்பட்டுள்ளது அதை எழுதிய எழுத்தாளர் சோ. தர்மனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது

ஒவ்வொரு ஆண்டு மத்திய அரசின் சார்பில் எழுத்தாளர்களுக்கான உயர்ந்த விருதுகளாக சாகித்ய அகாடமி விருதுகள் வழங்கப்படும். ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ராஜஸ்தானி, உருது, சிந்தி, 24 மொழிகளில் சிறந்த நூல்களை தேர்ந்தெடுத்து அதை எழுதிய ஆசியர்கள் கௌரவிக்கப்படுவார்கள். அப்படி வழங்கப்படும் விருதுடன் ரூ.1,00,000 பணமும் வழங்கப்படும்.

 Sahitya Akademi Award 2019 tamil winner SO. Dharmarajan , book sool

இந்த ஆண்டுக்கான (2019) தமிழில் சிறந்த நாவலாக 'சூல்' என்ற நாவல் தேர்வு செய்யப்பட்டுள்ளது அதை எழுதிய எழுத்தாளர் சோ. தர்மனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்தவர் ஆவார். 66 வயதாகும் சோ.தர்மன், சூல், சோ. தர்மன் கதைகள். ஈரம், சொக்கவனம், கூகை உள்ளிட்ட பல நாவல்களை எழுதி இருக்கிறார். நிறைய விருதுகளை வென்று இருக்கிறார். இவருடைய புத்தகங்கள் பல பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.

குடியுரிமை மறுக்கப்பட்டால்.. ஒரு கவலையும் இல்லை ராஜா.. கைலாசா நாட்டுக்கு போய்டுவேன்.. சீமான் கிண்டல்குடியுரிமை மறுக்கப்பட்டால்.. ஒரு கவலையும் இல்லை ராஜா.. கைலாசா நாட்டுக்கு போய்டுவேன்.. சீமான் கிண்டல்

கரிசல் மண் சார்ந்த வேளாண் மக்களின் வாழ்விலை பதிவு செய்யும் படைப்பாளிகளில் முக்கியமானவராக போற்றப்படுகிறதார் சோ.தர்மன். சோ. தர்மராஜ் என்ற இயற்பெயர் கொண்ட இவர், சோ. தர்மன் என்ற பெயரில் எழுதுகிறார்.

கடந்த 2018ம் ஆண்டு சஞ்சாரம் என்ற நாவல் சிறந்த நாவலாக தேர்வு செய்யப்பட்டது. இதை எழுதிய எஸ் ராமகிருஷ்ணனுக்கு சாகியத் அகாடமி விருது வழங்கப்பட்டது.

English summary
Sahitya Akademi Award 2019 tamil winner SO. Dharmarajan , book 'sool '. He was born in Kovilpatti Taluk in Tuticorin district of Tamil Nadu. The real name is S. Dharmaraj.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X