For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

"சலங்கை ஒலி" இயக்குநர் கே.விஸ்வநாத் காலமானார்.. சோகத்தில் ஆழ்ந்த திரையுலகம்!

ஜாம்பவான் இயக்குநர் கே.விஸ்வநாத் வயது முதிர்வு காரணமாக காலமானார்.

Google Oneindia Tamil News

சென்னை: இந்திய சினிமாவின் மூத்த இயக்குநர்களில் ஒருவரான கே.விஸ்வநாத் வயது முதிர்வு காரணமாக காலமானார். கமல்ஹாசன் நடிப்பில் உருவான சலங்கை ஒலி படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரிட்சியமானார். இவரது மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்தியாவில் மாற்று சினிமா எடுக்கும் முன்னோடி இயக்குநர்களில் ஒருவரான இயக்குநர் கே.விஸ்வநாத் வயது முதிர்வு காரணமாக காலமானார். 92 வயதான கே.விஸ்வநாத், ஹைதராபாத்தில் உள்ள தனது இல்லத்தில் வயது முதிர்வு காரணமாக காலமானார்.

இவர் நீண்ட காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். கலா தபஸ்வி என்று அழைக்கப்படுபவர் இயக்குநர் கே.விஸ்வநாத். இவர் 1930ம் ஆண்டு ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் பிறந்தவர்.

Salangai Oli director K Viswanath passed away at the age of 92 in hyderabad

இவர் கடந்த 1957-ல் சென்னையில் தனது திரைப்பட வாழ்க்கையை தொடங்கினார். ஒலிப்பதிவாளராக சினிமாவில் தடம்பதித்த இவர், 1975ல் முதன்முறையாக ஆத்ம கவுரவம் என்ற தெலுங்கு திரைப்படத்தை இயக்கினார். இதற்காக கே.விஸ்வநாத்திற்கு நந்தி விருது வழங்கப்பட்டது.

அதன் பின்னர் இவர் சிரிசிரி முவ்வா, சங்கராபரணம், சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து உட்பட பல தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம் மற்றும் கன்னடப் படங்களை இயக்கினார். 50 படங்களுக்கு மேல் இயக்கிய விஸ்வநாத், ஏராளமான படங்களிலும் நடித்துள்ளார்.

அஜித்குமார் நடித்த முகவரி, விக்ரம் நடித்த ராஜபாட்டை, சூர்யா நடித்த சிங்கம் 2, தனுஷ் நடித்த யாரடி நீ மோகினி, கமல்ஹாசனுடன் உத்தம வில்லன், குருதிப்புனல், ரஜினிகாந்த் உடன் லிங்கா உள்ளிட்ட ஏராளனான படங்களில் தமிழில் நடித்திருக்கிறார். இந்தியாவின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான தாதாசாகேப் பால்கே விருதை பெற்றுள்ளார். அதேபோல் இவருக்கு பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் 5 தேசிய விருதுகள், ஆந்திர அரசின் ஏழு நந்திவிருதுகள், 10 தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள், ஒரு இந்தி பிலிம்பேர் விருது என ஏகப்பட்ட விருதுகளை வாங்கிக் குவித்திருக்கிறார். சமீபகாலமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த இயக்குநர் கே.விஸ்வநாத் ஹைதராபாத் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.

அண்மையில் கூட நடிகர் கமல்ஹாசன் இவரை நேரில் சந்தித்த நலம் விசாரித்ததோடு, அவரிடம் ஆசிர்வாதம் பெற்று கொண்டார். இவரின் மறைவு தென்னிந்திய திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தியா சினிமாவின் முக்கிய ஜாம்பவான்களில் ஒருவரான கே.விஸ்வநாத் மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்

English summary
One of the veteran directors of Indian cinema, K. Viswanath passed away due to old age. He became known to Tamil cinema fans by directing the movie Salangai Oli starring Kamal Haasan. Many celebrities are condoling his death.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X