For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சேலத்தில் சிட் பண்ட் மூலம் பணம் வசூலித்து ரூ. 2 கோடி மோசடி: தொழிலதிபர் கைது - வீடியோ

சேலத்தில், பொதுமக்களிடம் பல்வேறு தொழில் முதலீடாக பணம் வசூலித்து மோசடி செய்த தொழில் அதிபர் சிவக்குமார் என்பவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

By Suganthi
Google Oneindia Tamil News

சேலம்: பொதுமக்களிடம் சிட் பண்ட் மூலம் 2 கோடி ரூபாய் பணத்தை வசூலித்து, திருப்பித் தராத தொழில் அதிபரை போலீசார் கைது செய்தனர்.

சேலத்தைச் சேர்ந்த தொழில் அதிபர் சிவக்குமார். இவர் வின்ஸ்டார் என்ற சிட் பண்ட் நிறுவனம் நடத்தி, அதன் மூலம் மக்களிடம் பல கோடி ரூபாய் பணம் வசூலித்துள்ளார். அந்தப் பணத்தை முதலீடாகக் கொண்டு துணிக்கடை, பாத்திரக்கடை உள்ளிட்ட ஏராளமான நிறுவனங்களை நடத்திவந்துள்ளார்.

 In Salem An Industrialist cheated people who invested money in his firm

மக்கள் தங்கள் கட்டிய பணத்தை திரும்ப கேட்டு சிவக்குமார் அலுவலகத்துக்கு சென்றனர். ஆனால், அவர் பணத்தைத் திருப்பிக் கொடுகாத காரணத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தனர். அவர் ரூபாய் 2 கோடிக்கும் மேல் மோசடி செய்துள்ளார்.

அதையடுத்து, போலீசார் சிவக்குமாரை கைது செய்து விசாரணை போலீசார் நடத்தி வருகின்றனர். இம்மாதிரியான நிதி நிறுவனங்கள் மக்களை ஏமாற்றி மோசடி செய்தும் திரும்பத் திரும்ப அம்மோசடிக்கு பலியாவது கவலைக்குரிய விஷயம் என சம்பந்தப்பட்ட போலீசார் தெரிவித்தனர்.

English summary
In Salem An Industrialist cheated people who invested money in his firm and he has been arrested by Police.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X