For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இப்படி ஒரு கலெக்டர் நெல்லைக்குக் கிடைத்திருந்தால் 4 உசிரு போயிருக்காதே!

சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகினியின் தனது நடவடிக்கையால் அதிரடி காட்டி வருகின்றார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    இப்படி ஒரு கலெக்டர் நெல்லைக்குக் கிடைத்திருந்தால் 4 உசிரு போயிருக்காதே!

    சேலம்: ஆட்சியர் ரோகினியின் தனது நடவடிக்கையால் அதிரடி காட்டி வருகின்றார். இதனால் அவருக்கு மக்களிடையே வரவேற்பு அதிகரித்துள்ளது.

    சேலம் மாவட்டத்தின் 171 ஆவது கலெக்டராக ரோகினி ராம்தாஸ் கடந்த ஆகஸ்ட்டு மாதம் பதவியேற்றார். இவர் சேலம் மாவட்டத்தின் முதல் பெண் கலெக்டர் ஆவார்.

    ரோகினி, 2008-ம் ஆண்டில் நடைபெற்ற ஐ.ஏ.எஸ். தேர்வில் தேர்ச்சி பெற்று, திருநெல்வேலி மாவட்டம் சேரன்மாதேவியில் சப்-கலெக்டராக தனது பணியை தொடங்கினார். அப்போது தாமிரபரணி ஆற்றில் இரவு நேரத்தில் மணல்திருட்டில் ஈடுபட்டவர்களை மடக்கிபிடித்து பாராட்டுக்களைப் பெற்றார்.

    கிலியை கிளப்பும் ஆட்சியர்

    கிலியை கிளப்பும் ஆட்சியர்

    சப் கலெக்டராக இருந்தபோதே கெத்து காட்டிய ரோகினி சேலம் கலெக்டராக பொறுப்பேற்றதில் இருந்து பின்னி பெடலெடுத்து வருகிறார். சேலம் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்ற முதல் நாளே மக்களுக்கு தேவையான வசதிகள் அலுவலகத்தில் செய்யப்பட்டுள்ளதா என ஆய்வு நடத்தி கிலியை கிளப்பினார்.

    மாற்றுத்திறனாளிகளிடம் உறுதி

    மாற்றுத்திறனாளிகளிடம் உறுதி

    மாற்றுத்திறனாளிகளுக்கு வசதியாக நாற்காலிகள் உள்ளிட்டவற்றை வழங்கினார். அவர்களின் குறைகளையும் கேட்டறிந்து நடவடிகை எடுப்பதாக உறுதியளித்தார் ஆட்சியர் ரோகினி.

    ஆச்சரியப்பட்ட மக்கள்

    ஆச்சரியப்பட்ட மக்கள்

    மாற்றுத்திறனாளிகளின் குறைகளை கேட்க அவர்களுக்கு சமமாக தரையோடு தரையாக அமர்ந்து குறைகேட்டார் ஆட்சியர். ஆட்சியர் ரோகினியின் இந்த நடவடிக்கை மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

    ஆசிரியராக மாறிய ஆட்சியர்

    ஆசிரியராக மாறிய ஆட்சியர்

    ராஜபாளையம் அருகே பள்ளி மாணவர்கள் வெளியில் விளையாடியதை காரில் செல்லும் போது பார்த்த ஆட்சியர் ரோகினி பள்ளிக்கு சென்றார். ஆசிரியர்கள் அனைவரும் ஜாக்டோ ஜியோ போராட்டத்துக்கு சென்றதை அறிந்த அவர் ஆசிரியராக மாறி குழந்தைகளுக்கு பாடம் நடத்தினார்.

    ரூ.15 லட்சம் அபராதம்

    ரூ.15 லட்சம் அபராதம்

    இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் டெங்கு குறித்து ஆய்வு செய்த அவர், கொசு உற்பத்திக்கு காரணமான தனியார் பஸ் நிறுவனத்துக்கு 15 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளார். அவரது நடவடிக்கைக்கு மக்களிடையே ஆதரவு பெருகியுள்ளது.

    விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்

    விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்

    மஹாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த ரோகிணி விவசாய குடும்பத்தை சேர்ந்தவர் ஆவார். அரசுப் பள்ளியில் படித்த இவர் 2008ஆம் ஆண்டு நடைபெற்ற ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்று நெல்லை சேரன் மாதேவியில் சப் கலெக்டராக பணியை தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Salem Collector Rohini getting more respect from public. Collector Rohini acting fastly on public issue.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X