For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அதிரடி காட்டும் கலெக்டர்.. இன்று மட்டும் ரூ.30 லட்சம் அபராதம் விதிப்பு

சேலத்தில் கொசு உற்பத்தி செய்த தனியார் கல்லூரிக்கு 10 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

சேலம்: அம்மாப்பேட்டையில் கொசு உற்பத்தி செய்த தனியார் கல்லூரிக்கு 10 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

டெங்கு அதிகம் பாதித்துள்ள மாவட்டங்களில் ஒன்றான சேலத்தில் மாவட்ட ஆட்சியர் ரோகினி ஆய்வு செய்தார். டெங்கு பாதித்துள்ள பகுதிகளில் உள்ள கடைகள் கல்வி நிறுவனங்களில் அவர் ஆய்வு மேற்கொண்டார்.

Salem collector Rohini imposed Rs. 30 lakhs to the private concern for producing mosquitoes

அப்போது கொசு வளரும் வாய்ப்புள்ள வகையில், சுற்றுப்புறத்தை வைத்திருந்த எல்.ஆர்.என் பஸ் நிறுவனத்திற்கு ரூ.15 லட்சம் அபராதம் விதித்தார் இதைத்தொடர்ந்து பல பகுதிகளிலும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆட்சியர் ரெய்டு நடத்தினார்.

அப்போது சேலம் அம்மாப்பேட்டையில் இயங்கி வரும் சக்தி கைலாஸ் தனியார் கல்லூரிக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. கொசு உற்பத்தியாகும் வகையில் சுற்றுப்புறத்தை வைத்திருந்ததால் கல்லூரி நிர்வாகத்துக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் களரம்பட்டியில் உள்ள ஏஆர்கே காம்ப்ளக்ஸ்க்கு 5 லட்சம் ரூபாயும் சேலம் புறநகர் பேருந்து நிலையம் பின்புறம் உள்ள தனியார் ஹோட்டலுக்கு 5 லட்சம் ரூபாயும் அபராதம் விதிக்கப்பட்டது. இன்று ஒரே நாளில் மட்டும் 30 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளார் சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகினி.

English summary
Salem collector Rohini imposed Rs. 30 lakhs to the private concern for producing mosquitoes. A private college and hotels imposed by fine.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X