For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மேட்டூர் அணை நோக்கி வேகமாக பாய்ந்து வரும் காவிரி.. கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

மேட்டூர் அணை நோக்கி காவிரி நீர் வேகமாக பாய்ந்து வருவதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    காவிரியில் அதிகரிக்கும் தண்ணீர்... 90 அடியை எட்டும் மேட்டூர் அணை

    சேலம்: மேட்டூர் அணைக்கு வரும் நீர் வரத்து அப்படியே இரண்டு மடங்காக அதிகரிக்கப் போவதால் முன்னெச்சரிக்கையாக கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு சேலம் மாவட்ட ஆட்சியர் ரோஹிணி உத்தரவிட்டுள்ளார்.

    கர்நாடகத்தில் காவிரியின் குறுக்கே உள்ள அணைகள் நிரம்பியுள்ளன. இதனால் பெருமளவிலான உபரி நீர் காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது. இது மேட்டூர் அணைக்கு வந்து கொண்டுள்ளது.

    Salem collector warns the people who are in the banks of Cauvery river

    இந்த நிலையில் தற்போது கர்நாடகத்திலிருந்து கிட்டத்தட்ட 1 லட்சம் கன அடி அளவுக்கு தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் மேட்டூருக்கு வரும் நீரின் அளவும் அப்படியே இரண்டு மடங்காக அதிகரிக்கும் என்று தெரிகிறது. தற்போது மேட்டூர் அணைக்கு கிட்டத்தட்ட 45,000 கன அடி நீர் வரை வந்து கொண்டுள்ளது. இது நாளைக்குள் இரண்டு மடங்காக அதிகரிக்க வாய்ப்புள்ளது.

    இதையடுத்து சேலம் மாவட்ட காவிரிக் கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ரோகிணி உத்தரவிட்டுள்ளார்.

    மேலும் அவசர உதவிக்கு 1077 என்ற தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம் என்றும் ஆட்சித் தலைவர் கூறியுள்ளார்.

    மேட்டூர் அணைக்கு மிகப் பெரிய அளவில் தண்ணீர் வருவதால் விரைவில் அது 100 அடியைத் தாண்டலாம் என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகளும் ஆர்வத்துடன் காத்துள்ளனர்.

    English summary
    Salem District Collector Rohini warns the people who are in the banks of Mettur Dam go to safer places.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X