For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஓமலூர் வழக்கில் சீமானுக்கு முன் ஜாமீன் வழங்கியது சேலம் நீதிமன்றம்

ஓமலூர் வழக்கில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைபாளர் சீமானுக்கு சேலம் நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

Google Oneindia Tamil News

சேலம்: சீமான் வன்முறையைத் தூண்டும் விதமாகப் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில் சேலம் மாவட்ட நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

சேலம் மாவட்டம் ஓமலூரில் கடந்த மாதம் நடைபெற்ற நாம் தமிழர் கட்சிப் பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டார். அந்த பொதுக்கூட்டத்தில் பேசிய சீமான் பொதுமக்களை வன்முறைக்கு தூண்டியதாக ஓமலூர் போலீஸார் சீமான் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.

Salem court anticipatory bail garanted to Seeman

இந்த வழக்கு தொடர்பாக போலீஸார் தன்னை கைது செய்யக் கூடாது என்று சேலம் நீதிமன்றத்தில் சீமான் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த முன் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று சேலம் நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி,சீமானுக்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

English summary
In Omalur case Salem court PDJ anticipatory bail granted to Naam Thamizhar Party State co ordinator Seemaan on Friday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X