For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வன்னியர்களை கூண்டோடு களம் இறக்கிய திமுக.. சேலம் மாவட்ட வேட்பாளர்கள் பயோடேட்டா

Google Oneindia Tamil News

சென்னை: சேலம் மாவட்டத்தில் திமுக பெருமளவில் வன்னியர் சமுதாயத்தினரை வேட்பாளர்களாக களம் இறக்கியுள்ளது.

முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் ராஜா இதில் விஐபி வேட்பாளர்.

சேலம் மாவட்ட திமுக வேட்பாளர்களின் பயோடேட்டா.

இரா. ராஜேந்திரன்

சேலம் வடக்கு தொகுதியில் வழக்கறிஞர் ராஜேந்திரன்ராஜேந்திரன் போட்டியிடுகிறார். வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். 1980-ஆம் ஆண்டு முதல் திமுக மாணவர் அணி உறுப்பினர். 1984-1992 வரை சேலம் மாவட்ட மாணவரணி அமைப்பாளர், 1992-1999 வரை சேலம் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர், 1999 முதல் திமுக இளைஞரணி மாநில துணைச் செயலர், 2001 முதல் தலைமைச் செயற்குழு உறுப்பினர். தற்போது, சேலம் மத்திய மாவட்டச் செயலாளராக இருந்து வருகிறார். 2006 முதல் 2011- வரை பனைமரத்துப்பட்டி தொகுதி சட்டசபைத் தொகுதி உறுப்பினர். 2011- இல் பனைமரத்துப்பட்டி தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகு சேலம் மேற்கு தொகுதியாக உருவாக்கப்பட்டது. சேலம் மேற்கு தொகுதியில் நின்று வெற்றி வாய்ப்பை இழந்தார். தற்போது சேலம் வடக்குத் தொகுதியில் போட்டியிடுகிறார்.

எம்.குணசேகரன்

சேலம் தெற்கில் போட்டியிடுகிறார் குணசேகரன்குணசேகரன். வழக்கறிஞர். 1978 -இல் கட்சியின் அடிப்படை உறுப்பினராகச் சேர்ந்தார். 1992 முதல் 2000 ஆம் ஆண்டு வரை மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர். 2006 முதல் 2015 வரை மாநகர துணைச் செயலர். சேலம் மாநகராட்சியில் உறுப்பினராக இருந்தவர். இவரது மனைவி சரளா தற்போது கவுன்சிலராக உள்ளார்.

பன்னீர் செல்வம்

சேலம் மேற்கு தகுதியில் போட்டியிடுகிறார் சி. பன்னீர் செல்வம்பன்னீர் செல்வம். அந்தக் காலத்து பியூசி படித்துள்ள இவர் வன்னியர். 1977 முதல் திமுக உறுப்பினர். 25 ஆண்டுகள் ஜாகீர் அம்மாபாளையம் கிளைச் செயலர். ஐந்து ஆண்டுகள் சேலம் ஒன்றிய துணைச் செயலர். சேலம் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர். சேலம் மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர். மூன்று முறை சூரமங்கலம் பகுதி செயலர்.

சி. தமிழ்ச்செல்வன்

ஏற்காடு ஏற்காடு தனி தொகுதியில் போட்டியிடுகிறார் தமிழ்ச்செல்வன். 45 வயதாகும் இவர் 8ம் வகுப்பு படித்துள்ளார். 2006 - 2011 ஏற்காடு எம்எல்ஏவாக இருந்தவர். 1996 -2001-இல் ஊராட்சி துணைத் தலைவர், 2001- 2006-இல் ஒன்றிய துணைச் செயலாளராக இருந்தவர்.

எஸ்.அம்மாசி

ஓமலூர் ஓமலூர் தொகுதியில் போட்டியிடுகிறார் அம்மாசி. 57 வயதான இவர் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர். ரயில்வே காண்டிராக்டராக இருக்கிறார். 1991ல் நடைபெற்ற தேர்தலில் பாமக சார்பில் தாரமங்கலம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியுற்றார். பின்னர் 1996-இல் திமுகவில் இணைந்த இவர், 2001 தேர்தலில் திமுக சார்பில் அதே தாரமங்கலம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியுற்றார்.

வீரபாண்டி ராஜா

வீரபாண்டி தொகுதியில் போட்டியிடுகிறார் வீரபாண்டி ஆ. ராஜா ராஜா என்கிற ஆ.ராஜேந்திரன். 54 வயதான இவர் மறைந்த வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் ஆவார். கல்லூரி நடத்தி வருகிறார். பூலாவாரியைச் சேர்ந்தவர். 1982-ஆம் ஆண்டு முதல் திமுக உறுப்பினர், கட்சியின் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர். சேலம் மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர். ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினராக இருந்துள்ளார். தற்போது சேலம் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளராக பதவி வகித்து வருகிறார். கடந்த 2006-இல் வீரபாண்டி தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாகத் தேர்வு செய்யப்பட்டவர். 2011-இல் மீண்டும் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். தற்போது மூன்றாவது முறையாக அதே தொகுதியில் போட்டியிடுகிறார்.

பி.ஏ. முருகேசன்

எடப்பாடி தொகுதியில் போட்டியிடுகிறார் முருகேசன் முருகேசன். பி.ஏ. படித்துள்ள இவரும் வன்னியர்தான். 1993-ஆம் ஆண்டு முதல் எடப்பாடி ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர், 1998- 2003-ஆம் ஆண்டு வரை மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர். 2006- 2016 வரை தலைமைப் பொதுக்குழு உறுப்பினர், தலைமைச் செயற்குழு உறுப்பினர்.

English summary
Salem district DMK candidates bio data.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X